தொடரும் போராட்டத்தினால் நெருக்கடியில் அரசாங்கம்! - சீ.வி

April 21, 2017

 வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்ரன் முல்லைத்தீவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் குறித்த விஜயத்தை இன்று மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது தமது காணிகளை விடுவிக்கக்கோரி 50 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்களையும் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது அவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்குமாறும், இதற்கு தன்னாலான முழு ஆதரவினை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் குறித்த விடயத்திற்கு அரசாங்கம் உரிய பதில் வழங்காதிருப்பதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் 41 நாட்களாக போராட்டத்தை நடத்தி வருகின்ற காணாமல் போனோரை சந்தித்த போது அவர் இந்த விடயத்தைக் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்ற நிலையிலேயே காணாமல் போனோர் குறித்த விடயத்துக்கு அரசாங்கம் பதில் கூறாதிருக்கின்றது.

கொலை செய்து விட்டோம் என்றோ அல்லது இந்த இடத்தில் தடுத்து வைத்திருக்கிறோம் என்றோ, அரசாங்கம் பதில் கூறினால், அது அரசாங்கத்துக்கோ சிக்கலை ஏற்படுத்தும். இதனாலேயே அரசாங்கம் இந்த விடயத்தில் மௌனமாக இருக்கிறது.

எவ்வாறாயினும் இந்த விடயத்தில் உரிய அழுத்தங்களை பிரயோகித்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

செய்திகள்
வெள்ளி செப்டம்பர் 22, 2017

இதுவரை சிங்களவர்களுக்கு எதிரானவர் எனப் பார்க்கப்பட்ட அவர் இப்போது தமிழர்களுக்கு ஆபத்தானவராக மாறிவிட்டார்...