நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் ஜோசப் கைது

யூலை 25, 2017

ஹைதராபாத் போதை மருந்து கடத்தல் வழக்கில் பிரபல நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் பள்ளி சிறார்கள், கல்லூரி மாணவர்கள், திரையுலக பிரபலங்களுக்கு போதை மருந்து விற்பனை செய்து வந்த கும்பல் அண்மையில் சிக்கியது.

அந்த கும்பலைச் சேர்ந்த மற்றும் கும்பலுடன் தொடர்புடைய 18 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதுடன், நடிகர் தருண் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் ஜோசப்பிற்கு சொந்தமாக மணிகொண்டாவில் உள்ள வீட்டில் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது விட்டில் இருந்து போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜோசப் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

செய்திகள்
வெள்ளி June 29, 2018

60 வயதை தாண்டிய டிராபிக் ராமசாமிக்கு மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன், பேத்தி