நடிகை ரம்பா, கணவருடன் திருப்பதியில் தரிசனம்

April 11, 2017

நடிகை ரம்பா, தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.  ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘அருணாச்சலம்’ எனப் பல தமிழ்ப் படங்களில் முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்தவர்  ரம்பா. 2010-ம் ஆண்டு கனடாவில்  தொழிலதிபராக இருக்கும் இலங்கைத்தமிழர் இந்திரக்குமார் என்பவரைத் திருமணம்செய்துகொண்டார்.

கனடாவில், கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த நடிகை ரம்பா, கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்தார். சமீபத்தில், கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விருப்ப மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார் ரம்பா. வழக்கு விசாரணையின்போது, ரம்பாவுடன் சேர்ந்து வாழ அவர் கணவரும் விருப்பம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தனது கணவர் இந்திரக்குமார் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ரம்பா நேற்று(10)  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

செய்திகள்
ஞாயிறு April 08, 2018

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் நேற்று யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

வியாழன் April 05, 2018

அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.