நடிகை வரலட்சுமி பா.ஜ.வில் இணைந்தாரா!

புதன் ஜூன் 06, 2018

பா.ஜ.,வின் 4 ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அக்கட்சி தலைவர்கள் எல்லா துறையிலும் சிறந்து விளங்கும் பிரபலங்களை சந்தித்து சாதனை விளக்க அறிக்கை அளித்து வருகின்றனர்.

 அந்தவகையில் தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், நடிகை வரலட்சுமியை சந்தித்து சாதனை அறிக்கையை வழங்கினார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாக, வரலட்சுமி பா.ஜ.வில் இணைந்துவிட்டதாக செய்தி பரவியது. 

 இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வரலட்சுமி, டுவிட்டரில், "பா.ஜ., கட்சி நாட்டில் செய்யும் மாற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட சில விஷயங்களை முரளிதரராவ் உடனான சந்திப்பின் போது பேசினேன். எங்களின் கருத்துக்களை மோடி கேட்க ஆர்வமாய் இருப்பது மகிழ்ச்சி. பா.ஜ.வில் நான் இணைந்ததாக வந்த செய்தி முற்றிலும் தவறானது, நான் எந்த கட்சியிலும் இல்லை என கூறியுள்ளார்