நமஸ்தே கற்றுக்கொடுத்த நிர்மலா சீதாராமன்!

ஒக்டோபர் 09, 2017

சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாது லா எல்லைக்கு சென்ற பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கு பணியில் இருந்த சீன வீரர்களுக்கு நமஸ்தே என வணக்கம் சொல்ல கற்றுக்கொடுத்தார்.

சமீபத்தில் பாதுகாப்பு துறை மந்திரியாக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் எல்லையோர பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பு மற்றும் தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிப்பது குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
சில நாட்களுக்கு முன் காஷ்மீர் மாநிலம் சென்று ராணுவ உயரதிகாரிகள், அம்மாநில முதல்வர் மற்றும் கவர்னருடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாது லா பகுதிக்கு நிர்மலா சீதாராமன் நேற்று சென்றார். சீன எல்லைக்கு மிக அருகில் இருக்கும் பகுதிக்கு முதல் முறையாக அவர் வருகை தந்துள்ளார். 
 
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ - திபெத் எல்லைப்பாதுகாப்பு படை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அங்குள்ள இந்திய - சீன எல்லைக்கு சென்ற அவர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சீன ராணுவ வீரர்களுடன் உரையாடினார். 
 
அப்போது, சீன ராணூவ வீரர்கள் சீன மொழியில் வணக்கம் தெரிவித்தனர். இவர் அவர்களிடம் நமஸ்தே என கூறுமாறு தெரிவித்தார். மேலும், நமஸ்தேவுக்கான அர்த்தத்தை சீன வீரர்களுக்கு கூறியுள்ளார்.

செய்திகள்
செவ்வாய் February 20, 2018

தமிழ்நாடு முதலமைச்சர் 22.02.2018 அன்று கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்ட பரிசீலனைக்கான காவிரி உரிமை மீட்புக் குழுவின் கருத்துகள்