நல்லிணக்க அறிக்கையை நிராகரித்துள்ள சம்பிக்க!

January 12, 2017

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் அறிக்கையை நிராகரித்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க அதனைக் குப்பைக் கூடைக்குள் வீசுமாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (11)  செய்தியாளர்களைச் சந்தித்துக் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கலந்தாய்வுச் செயலணியின் பரிந்துரைகள், தேசிய நலனுக்கும், இன நல்லிணக்கத்துக்கும் விரோதமானவை.

செயலணியின் பரிந்துரைகள்மூலம் போர்க்குற்றங்களுக்காக எமது போர்வீரர்களையும், அரசியல் தலைவர்களையும் விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை சிறீலங்காவுக்கு அனுப்ப ஐநா தீர்மானித்துள்ளது.

மகிந்த ராஜபக்ஷ 12,000 விடுதலைப் புலிகளை போர்க்குற்றங்களுக்காக தண்டிக்காது விட்டமை அவர் விட்ட பெரிய தவறாகும். செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால், எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளே நன்மையடைவர் எனவும் தெரிவித்துள்ளார்.

செய்திகள்