நல்லை ஆதின முதல்வருடன் தமிழரசு கட்சியினர் சந்திப்பு!

June 18, 2017

தமிழரசு கட்சியினருக்கும் நல்லைஆதின முதல்வருக்கும்  இடையில் சந்திப்பு இடம்பெற்றது. தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள்  நல்லை ஆதின முதல்வரை சந்தித்தனர்.

தற்போது ஏற்பட்டுள்ள முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாதீர்மானம் தொடர்பாக விளக்கமளிப்பதற்கான சந்திப்பே இடம்பெற்றது. யாழ் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில்   இடம்பெறும் இச் சந்திப்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்களான சத்தியலிங்கம், அரியரட்ணம்,பரஞ்சோதி,  சிவயோகம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

செய்திகள்