நளினிக்கு 6 மாதம் பரோல் வழங்க முடியாது!

Thursday November 16, 2017

மகள் திருமணத்திற்கு 6 மாதம் பரோல் கோரிய நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்டோர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இந்நிலையில், நளினி தனது மகளின் திருமண வேலைகளுக்காக சிறையில் இருந்து வெளியில் செல்ல ஆறு மாதகாலம் பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு குறித்து விசாரித்த நீதிபதி அனுமதி அளிப்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தமிழக உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் ஆறு மாதங்கள் பரோல் அளித்தால் நளினி, சட்டத்தின் பிடியிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிசெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே அவருக்கு பரோல் வழங்க முடியாது. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.