நளினி தந்தை மரணம், நாளை சிறை விடுப்பில் வெளி வருகிறார்

Tuesday February 23, 2016

முன்னாள்  இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நளினி அவர் தந்தை சங்கரநாரயணன் இன்று உடல் நலக் குறைவால் இறந்ததை அடுத்து விடுப்பில் வர அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நளினியின் தந்தையும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருமான சங்கரநாராயணன் இன்று நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 91. இவரது உடல் நெல்லையில் இருந்து சென்னையில் உள்ள நளினியின் சகோதரர் இல்லத்துக்கு கொண்டுவரப்படுகிறது. இறப்பை அடுத்து இறுதி சடங்கில் பங்கு கொள்ள நளினிக்கு சிறை விடுப்பு கேட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறை நிர்வாகம் விடுப்பில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பரோலில் செல்ல சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இவரது கணவர் முருகன்  இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் ஆண்கள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.