நவாஸ் ஷெரீப் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் ஒத்திவைப்பு!

ஒக்டோபர் 03, 2017

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கின் மீதான விசாரணையில் நவாஸ் ஷெரீப் மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு விசாரணையை 9-ந் திகதிக்கு ஒத்திவைத்தி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, தீர்ப்பு அளித்த அந்த நாட்டு உச்ச நீதிமன்றம்   நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளை விரிவாக விசாரிக்கும்படி தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம்  உத்தரவிட்டது.

அதன்படி நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான 3 ஊழல் வழக்குகளை தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் மீதான முதல்கட்ட விசாரணையின்போது கடந்த மாதம் 26-ந் திகதி நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் ஆஜரானார். ஆனால் நவாஸ் ஷெரீப்பின் மகன்கள், மகள் மற்றும் மருமகன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை. எனவே அவர்கள் மீது பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நவாஸ் ஷெரீப் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் அவர் நீதிபதியின் முன்பு ஆஜரானார்.

அப்போது ஊழல் வழக்குகள் தொடர்பாக நவாஸ் ஷெரீப் மீது முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. நவாஸ் ஷெரீப்பின் வக்கீல் ஹவாஜா ஹரீஸ், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன், ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டுப்பட்டு உள்ள அனைவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அடுத்த விசாரணையின் போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை 9-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இன்றைய விசாரணையில் ஆஜராகாத நவாஸ் ஷெரீப்பின் மகன்கள், மகள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். 

செய்திகள்