நாகர்கோவில் படுகொலையும் சிறீலங்காவின் நரபலியெடுப்பும்

செப்டம்பர் 22, 2017

32வது ஆண்டு நினைவுகள்

அப்பாவி சிறுவர்கள் மீது கடந்த 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாம் 22 ஆம் திகதி விமானக் குண்டுவீச்சு மேற்கொள்ளப்பட்டது.

 

அன்றைய தினம் மதிய நேர இடைவேளையின்போது 12:30 அளவில் பாடசாலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது பகல் 12.50 அளவில் ஸ்ரீலங்கா விமானப் படைகளின் 'புக்காரா' விமானங்கள் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசின.

இன்போது எதுவும் அறியாது மரமொன்றின் கீழே பதுங்கிய 21 சிறுவர்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் 200 பேர் வரை படுகாயமடைந்தனர்.

இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது மாணவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்த தாக்குதலின்போது,

மயில்வாகனம் கணகநாதன்

இராமநாதன் கோபிதரன்

சுந்தரலிங்கம் பழனி

நாகமுத்து செந்தில்வேல்

கிருஷ்ணகுமார் தவசீலன்

இராசரத்தினம் உமாகாந்தன்

அல்போன்ஸ் அமலவிஜி

இரவிந்திரராசா அமிர்தா

இராசரத்தினம் கவிதா

இராமநாதன் மேதினி

மார்க்கண்டு நாகலோஜினி

பாலச்சந்திரன் ரஜிதா

தாமோதரம் சகுந்தலா

இராமச்சந்திரன் சங்கீதா

சிதம்பரப்பிள்ளை சசிருபி

செல்வகுலசிங்கம் செல்வதி

குகசரவணமலை தர்சினி

சுந்தரலிங்கம் தர்சினி

பூலோகராசா துஷாந்தினி

நவரத்தினசாமி உமாதேவி

தர்மலிங்கம் துஷந்தினி ஆகிய மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

செய்திகள்
சனி செப்டம்பர் 08, 2018

பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் இன்று Sampigny நகரைச் சென்றடைந்தது...

திங்கள் செப்டம்பர் 03, 2018

பேரணி அல்ல போர் அணியே தமிழீழ விடுதலையைப் பெற்றுத் தரும் - காசி ஆனந்தன்