நாடாளுமன்ற நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆணைக்குழு நியமிக்கப்படும்!

வியாழன் டிசம்பர் 06, 2018

நாடாளுமன்றத்தில் தற்போதைய நாட்களில் இடம்பெறுகின்ற நடவடிக்கைகள் சம்பந்தமாக தமது ஆட்சியின் கீழ் ஆணைக்குழு நியமித்து விசாரணை நடத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறினார். 

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை காலமும் இல்லாதவாறு ஜனநாயக விரோத நிலையயிற் கட்டளைக்கு எதிரான, நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு எதிரான கூட்டங்கள் பல அண்மைய நாட்களில் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். 

இந்த நிலைமை சீரானதன் பின்னர் அரசாங்கம் ஒன்றை அமைத்து நாடாளுமன்றத்திற்குள் இதுவரை நடந்த செயற்பாடுகள் சம்பந்தமாக சபாநாயகர் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் பெறுப்புக் கூற வேண்டி வரும் என்று மஹிந்த யாப்பா அபேவர்தன கூறினார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை நாட்டின் பொருளாதாரம், நாட்டின் இறையாண்மையை காட்டிக் கொடுக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறினார்.