நாடுகடத்தலை ஆட்சேபித்து மனுதாக்கல் செய்த இலங்கையர்

வியாழன் ஓகஸ்ட் 04, 2016

ஜப்பானில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் தமது நாடுகடத்தலை ஆட்சேபித்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

 ஜப்பான் நாகோய மாவட்ட நீதிமன்றத்தில் இந்த மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த மனுவின் மூலம் குறித்த இலங்கையர் 3.3 மில்லியன், அதாவது 32 ஆயிரம் அமெரிக்க டொலர்களை ஜப்பானிய மத்திய அரசாங்கத்திடம் இருந்து கோரியுள்ளார். 

 இந்த நிலையில், இது தொடர்பில் நேற்று ஜப்பானில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கருத்துரைத்த, நாடு கடத்தப்பட்ட இலங்கையரின் சட்டத்தரணிகள் , பொய்யான தகவல்களை தெரிவித்தே, தமது கட்சிக்காரர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தினர். 

 இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற நாடுகடத்தப்பட்டவரின் மனைவி, நாடு கடத்தப்பட்ட தமது கணவர், மீண்டும் ஜப்பானுக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

 இந்த நிலையில் ஜப்பானுடைய நீதியமைச்சின் குடிவரவு அதிகாரிகள் இந்த மனுதொடர்பில் கருத்து எதனையும் கூற மறுத்துவிட்டனர். 
 நாடுகடத்தப்பட்ட இலங்கையரால் தாக்கல் செய்யப்பட்ட மனுதொடர்பில் அறிந்த பின்னரே கருத்து கூற முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்