நாட்டுப்பற்றாளர் றிச்சாட் இமானுவேல்

January 04, 2018

தமிழீழ தேச விடுதலையை நேசித்து இலட்சிய உறுதியுள்ள தமிழராகத் தன்னை அடையாளப்படுத்தி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஜேர்மன் கிளையின் வூப்பெற்றால் நகர செயற்பாட்டாளர்களுள் ஒருவராக விளங்கிய நாட்டுப்பற்றாளர் றிச்சாட் இமானுவேல் அவர்கள் 30.12.2017 அன்று உடல் நலக்குறைவால் சாவடைந்துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் இளவாலையில் பிறந்த இமானுவேல் அவர்கள் தாயகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வாழ்ந்த போது 1987ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் வூப்பெற்றால் நகர செயற்பாட்டாளராகவும், தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளராகவும் தன்னை இணைத்துச் சிறப்பாகப் பணியாற்றத் தொடங்கினார். தன்னுடைய பணிக்காலத்தில் பல்வேறு பொறுப்பு நிலைகளுக்கூடாக தாயக விடுதலைப் போராட்டத்திற்கு வேண்டிய பங்களிப்புகளை நல்கியவர். தாயகத்தில் 2004ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமிப் பேரலையின் தாக்கத்தின் பின்னரான புனர்வாழ்வுப்பணிகள் சிறக்கவும் இமானுவேல் அவர்கள் முன்னின்று உழைத்தார்.

2009ஆம் ஆண்டு மே மாத நடுப்பகுதியில் எமது ஆயுதப்போராட்டம் மௌனித்த பின்பும், இவரது பணி ஓய்வடையவில்லை. தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன்னாலான தொடர்பணிகளை ஆற்றி வந்தார். தாயகப்பற்றும் தமிழ்மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்கின்ற அவாவும் கொண்டு முன்னின்று உழைத்த அற்புதமான மனிதரை இன்று நாம் இழந்து நிற்கின்றோம். இவரது இழப்பு இவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது தமிழ்மக்கள் அனைவருக்கும் துயர் தருவதாகும். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எமது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் நாட்டுப்பற்றாளர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் தேசப்பற்றுதிமிக்க செயற்பாட்டிற்காக சங்கதி24 தலை வணங்குகின்றது.

- சங்கதி24

செய்திகள்
வியாழன் March 22, 2018

தமிழகத்தின் தமிழினப் பற்றாளர்களில் குறிப்பிடக்கூடியவரான திரு. மருதப்பன் நடராஜன் அவர்கள் உடல்நலக்குறைவினால் இன்று அதிகாலை காலமான செய்தி எம்மை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.

செவ்வாய் March 20, 2018

50க்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் தமிழர் சார் பிரதிநிதிகளின் உரைகளைக் குழப்பியடித்துவருவதாக