நாட்டுப்பற்றாளர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு

January 06, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையின் வூப்பெற்றால் நகரச் செயற்பாட்டாளர் நாட்டுப்பற்றாளர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று 5.1.2018 வெள்ளிக்கிழமை வூப்பெற்றால் நகரில் உள்ள Katholischer Friedhofஇல் நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு தங்கள் இறுதிவணக்கத்தைத் தெரிவித்தனர்.

நாட்டுப்பற்றாளர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் சமயக் கிரியைகளின் நிறைவில், வூப்பெற்றால் நகரச் செயற்பாட்டாளர்களால் தமிழீழத் தேசியக்கொடி சுமந்துவரப்பட்டு அன்னாரின் பூதவுடலுக்கு போர்க்கப்பட்டது. மேலும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையினால் அன்னாருக்கு அகவணக்க அறிக்கை வாசிக்கப்பட்டது.

பின்பு தமிழீழத் தேசியக் கொடி நாட்டுப்பற்றாளர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் துணைவியாரிடம் கொடுக்கப்பட்டது. பின் அனைத்து மக்களும் அன்னாரது பூதவுடலுக்குப் பின்னால் அணியாகச் சென்று புதைகுழியில் மலர்தூவி விதைக்கப்பட்டது.

இணைப்பு: 
செய்திகள்
ஞாயிறு January 07, 2018

ஜனவரி மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை), ஒஸ்ரேலியா மெல்பேர்னில் East Burwood Reserve மைதானத்தில் கேணல் கிட்டு ஞாபகார்த்த ”தமிழர் விளையாட்டு விழா 2018” நடைபெறவுள்ளது.