நானும் அரசியலில் களமிறங்க இருக்கிறேன்!

January 08, 2018

இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ், எனக்குள்ளும் அரசியல் மீதான ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விரைவில் நான் நேரடி அரசியலில் பங்கேற்பது குறித்து அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

திரைப்பட இயக்குநர், நடிகர் பாக்யராஜ் பிறந்த நாள் விழா அவரது ரசிகர்கள் சார்பில் மதுரையில் உள்ள தனியார் ஒட்டலில் நடந்தது. விழா முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரஜினி, கமல் உள்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., தன் படங்களில் சமூகத்திற்கு தேவையான அரசியல் கருத்துக்களை புகுத்தினார். சகதொழிலாளிகளுக்கும், மக்களுக்கும் நல்லது செய்தார்.

ஆனால் தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழும். இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். தேர்தல் மன்னன் பத்மராஜன் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெறுவது இல்லை. எனவே மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

எம்.ஜி.ஆர். புகழை காப்பாற்ற அ.தி.மு.க.- தினகரன் அணிகள் ஒன்றாக இணைய வேண்டும். எனக்குள்ளும் அரசியல் மீதான ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விரைவில் நான் நேரடி அரசியலில் பங்கேற்பது குறித்து அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

செய்திகள்
வியாழன் January 04, 2018

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.