நான்கு நாட்களுக்கு புகையிரத சேவை இடைநிறுத்தம்!

Thursday February 22, 2018

மதவாச்சி மற்றும் தலைமன்னாருக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் 26ம் திகதி காலை முதல் மார்ச் மாதம் 02ம் திகதி வரை இவ்வாறு இடைநிறுத்தப்பட உள்ளதாக அத தெரணவிடம் அந்த திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார். 

மதவாச்சி மற்றும் தலைமன்னாருக்கு இடையிலான பகுதியில் பாலம் ஒன்று அமைக்கப்படுவதெ இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை தடுப்பதற்காக அந்தக் காலப்பகுதியில் மதவாச்சி மற்றும் தலைமன்னாருக்கு இடையில் இணைந்த பஸ் சேவை செயற்படுத்தப்பட உள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.