நான்கு பேர் மானிப்பாய் காவல் துறையால்கைது!

Wednesday July 11, 2018

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் வந்த நான்கு இளைஞர்களை மானிப்பாய் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றுக் காவலின் போது கல்லுண்டா வெளிப் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்துள்ளதாக காவல் துறையினர்  தெரிவிக்கின்றனர். 

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளையடுத்து காவல் துறை ரோந்து,காவல் துறை காவல் என்பன பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இவ்வாறு மானிப்பாய் காவல் துறை மேற்கொண்ட காவல் துறை சுற்றுக் காவலின் போதே நேற்றிரவு வாள்கள் இரும்புக் கம்பிகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.