நான் பெண்களை மதிப்பவன் - விஜய்

August 09, 2017

நான் பெண்களை மதிப்பவன் என்றும், யாருடைய படத்தையும் யாரும் விமர்சிக்க சுதந்திரம் உண்டு என்றும் நடிகர் விஜய் கூறியுள்ளார். பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் மீது விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் ட்விட்டரில் ஆபாசத் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

“சமுதாயத்தில் பெண்களை மதிப்பவன் நான். அனைவரும் பெண்மையைப் போற்ற வேண்டும். யாருடைய படத்தையும் விமர்சிக்க யாருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. 

எக்காரணம் கொண்டும் எந்த நேரத்திலும் பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ பேசக்கூடாது. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் கருத்துகளைப் பதிவிடக்கூடாது” என்று கூறியுள்ளார்.

செய்திகள்