நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட உலகத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்ற விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி

புதன் நவம்பர் 18, 2015

நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை விஜய் தொலைகாட்சி அலுவலகத்தில் அதன் மேலாளரை சந்தித்து மாவீரர் நாள் (நவம்பர் 27) அன்று சிங்கப்பூரில் நடைபெறுவதாக அறிவிக்கபட்டிருந்த "விஜய் கொண்டாட்டம்" நிகழ்ச்சியை வேறொரு நாளுக்கு மாற்றிக்கொள்ள வேண்டுகோள் வைக்கப்பட்டது. மாவீரர் தினத்தில் நடைபெறவிருந்த கலைநிகழ்ச்சியை ரத்துச் செய்வதாக விஜய் தொலைக்காட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட உலகத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்ற விஜய் தொலைக்காட்சிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.