நாயகன் நாட்களுக்கு மணிரத்னம் திரும்பி சென்றுள்ளார்!

Thursday September 06, 2018

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் செக்கச் சிவந்த வானம் படம், அவருடைய நாயகன் நாட்களுக்கு சென்றுள்ளார் என்று ஏ.ஆர்.ரகுமான் பேசியிருக்கிறார். 

மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் பாடி காண்பித்தார்.

அதன் பிறகு பேசிய அவர், இந்தப் படம் மணிரத்னம் சார், அவருடைய நாயகன் நாட்களுக்கு சென்றிருக்கிறார் என்று பேசினார்.