நாலக சில்வாவின் கருத்துக்கள் குறித்து விசாரணை!

வியாழன் செப்டம்பர் 13, 2018

சிறிலங்கா ஜனாதிபதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விடயத்தில், காவல் துறை  உயரதிகாரிகள் பலர் சம்பந்தப்பட்டுள்ளமைத் தொடர்பில், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதி , காவல் துறை மா அதிபர் நாலக சில்வா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில், உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு , காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர , காவல் துறை விசேட விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக , காவல் துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதி , காவல் துறைமா அதிபர் நாலக சில்வா நேற்று கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதியைக் கொலை செய்ய சில சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாகத் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.