நினைவுகள் சுமந்தவணக்கநிகழ்வு!

திங்கள் டிசம்பர் 24, 2018

சுவிசில் நடைபெற்ற'தேசத்தின் குரல்"அன்ரன் பாலசிங்கம்,தமிழீழஅரசியற்துறைப் பொறுப்பாளர்பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும்,தமிழீழவிடுதலைப் புலிகளின் பிரான்சுக் கிளையின் பொறுப்பாளர் கேணல் பருதிஅவர்களினதும் நினைவுகள் சுமந்தவணக்கநிகழ்வு!

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்,தமிழீழஅரசியற்துறைப் பொறுப்பாளர்பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும்,தமிழீழவிடுதலைப் புலிகளின் பிரான்சுக்; கிளையின் பொறுப்பாளர்கேணல் பருதிஅவர்களினதும் நினைவுகள் சுமந்தவணக்கநிகழ்வானது22.12.2018சனிக்கிழமைஅன்றுலுட்சேர்ன்மாநிலத்தில் சிறப்பாகஎழுச்சியுடன் நடைபெற்றது. 

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்கநிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடிஏற்றிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்துஈகைச்சுடர்ஏற்றிஅகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர்,மலரஞ்சலிசெலுத்தப்பட்டவேளையில்இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.

மாவீர வித்துக்களானஅரசியல் பெருந்தகைகள் மற்றும்புலத்தில் அயராது உழைத்த கேணல் பருதி அவர்களின்நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின்எழுச்சிநிகழ்வுகளாகஇளையோர்களின் எழுச்சிநடனங்கள்,காலத்தின் தேவைகருதியசிறப்புரையோடு,கவிதையும் இடம்பெற்றதுடன் மாவீரவித்துக்களின் நினைவுகள் சுமந்த காணொளிக் காட்சித்தொகுப்புக்களும்அகன்றவெண்திரையில் காண்பிக்கப்பட்டதோடு,அரங்கம் நிறைந்துநூற்றுக்கணக்கானமக்கள் கலந்துகொண்டமையானதுமிகவும் உணர்வுபூர்வமாகஅமைந்திருந்தது.

நிகழ்வின் இறுதியாகநம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன. 

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக்குழு