நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

திங்கள் மார்ச் 21, 2016

வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா கைக்கூலிபடையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் மற்றும் தீயில் கருவான வீரத்தமிழ் மகன் முத்துக்குமார், ஈகைப்பேரொளி முருகதாசன், ஈகைப்பேரொளிசெந்தில்குமரன் உட்பட 25 வீரத்தமிழ்மகன்கள், தியாகச்சுடர் வீரமங்கை செங்கொடி ஆகியோரின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 20.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச் மாநிலம் வின்ரர்த் தூர் நகரில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.