நிமிர்ந்த பனை - லெப். கேணல் சூட்.!

நவம்பர் 11, 2016
லெப். கேணல் சூட்.!
 
நிமிர்ந்த பனை
 
சிலந்திவலைப் பின்னலாகிப் படர்ந்திருந்த இந்தியர்களின் கையில், தமிழீழம் சிக்கிப்போயிருந்தது ஒரு காலம்.
 
மறக்க முடியாத அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் நின்றுபிடித்து புலிகளின் சுவடுகளைப் பேணிக்காத்து நிலைநிறுத்தி வைத்திருந்த வீரர்கள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிலபேர்தான். அந்தச் சிலபேருக்குள் நேற்றுவரையும் எஞ்சியிருந்தவந்தான் சூட்.
 
அவனை விளங்கிக்கொள்ள அந்த நேரத்து “இராணுவச் சூழ்நிலை” யைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்த சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வலிகாமத்தின் தரையமைப்பைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
 
தமிழீழத்தில் வேறெங்கும் இல்லாதவிதமாக முற்றுமுழுதான நகரச் சூழலை பெரிய அளவில்கொண்ட புவியியல் அமைப்பையும், குறைந்தளவு நிலத்தில் கூடியளவு மக்கள் அடர்த்தியாக வாழும் குடியியல் நிலையையும் கொண்ட பிரதேசம் அது.
 
பகைவனுக்கு முழுமையாக ஒத்துழைத்தது அந்த நில அமைப்பு. அது அவனுக்குச் சாதகமான ஒரு சூழல்.
 
அதே சமயத்தில், இனங்காண முடியாமல் சனங்களோடு இரண்டறக் கலந்திருந்த துரோகிகள் வேறு. இந்தியர்கள் போட்ட எலும்புகளை நக்கிக்கொண்டிருந்து, இயலுமான அளவுக்கு அவர்களுக்குத் துணைபோன கும்பல்களும், ஆட்களும்.
 
இதற்குள் இன்னொரு விடயம் என்னவென்றால், யாழ்ப்பாண மாநகரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் வலிகாமம் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுமான ஒன்றாக இந்திய – சிறிலங்காத் தளபதிகள் அப்போதும் இப்போதும் கருதுகிற அளவுக்கு முக்கியத்துவத்தையும் பெற்றிருந்த பகுதி அது.
 
அந்தவகையில், மணலாற்றுக்கு அடுத்தபடியாக இந்தியர்களின் அதிகூடிய கவனம் செலுத்தப்பட்ட மையமாகவும் வலிகாமப் பகுதி விளங்கியது.
 
இத்தகைய ஒரு புற நிலைமைக்குள், உயிர்வாழவே உத்தரவாதமற்ற இராணுவச் சூழ்நிலைக்குள்,
புலிகள் இயக்கத்தை நிலைநிறுத்தி வைத்திருப்பதற்கு இடையறாது போராடிய வரலாற்று நாயகர்களில் எஞ்சியிருந்தவன் சூட் மட்டும்தான்.
ராஜன், சுபாஸ், லோலோ, தும்பன், ரெட்ணா, கட்டைசிவா, கரிகாலன்…………… என எல்லோரும் அவனைவிட்டுப் போய்விட, அவர்களின் நினைவுகளைச் சுமந்துகொண்டு போராடியவன் இன்று எங்களை விட்டுப் போய்விட்டான்.
 
இப்போது……. அவனது நினைவுகளைச் சுமந்துகொண்டு நாங்கள்…..
அந்த இருண்ட இரண்டரை வருடங்கள். அது மிக நெருக்கடியான காலகட்டம். வர்ணித்துச் சொல்லமுடியாத ஒரு பயங்கரச் சூழ்நிலை அப்போது நிலவியது.
 
பாசமிகு மக்கள் பாதுகாத்து இடமளிக்கத், தூங்கப்போகும் இரவுகள் தூக்கமற்றுப் போகும். ஊரோசையுமற்று அசையும் இரவில், தூரத்து நாயோசை இந்தியன் நகரும் சேதியைச் சொல்லும். திடீரென ஒரு பதற்றம் பற்றிக்கொள்ளும். அந்த சூழ்நிலையில் அது இயல்பானது. நாய் குரைப்புச் சத்தம் அகோரமாய் நெருங்கும். அது ஒரு அச்சமூட்டும் குறியீடு. விரிந்து நகர்ந்து வட்டமிட்டுச் சுருங்கி எதிரி முற்றுகையிடுகிறபோது, நாயோசை உச்சக்கட்டத்தில் இரையும். நெஞ்சு விறைத்துப்போகும். 
 
நள்ளிரவின் அமைதி சிதைய ஊர் துடித்து விழிக்கும். தங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மனங்கள் “பிள்ளைகளைக்” காக்கச் சொல்லியும் இறைவனிடம் மன்றாடும். துப்பாக்கிகள் தயாராகும். தேர்வு நெம்பு, தானியங்கிக்கு மாற, சுட்டுவிரல் சுடுவில்லை வளைத்துக்கொள்ளும். இருளை ஊடறுத்து விழிகள் முன்னேறும். 
 
எதிரி எதிர்ப்படும் கணத்தில் சன்னங்கள் பாய முற்றுகை உடைபடும். தப்பித்து மீண்டு, சொல்லப்பட்ட இடமொன்றில் சந்திக்கின்றபோது தோழர்களில் ஒருவனோ இருவரோ வந்திருக்கமாட்டார்கள்………….
 
ஆள்விட்டுப் பார்த்து ஆமி இல்லை என்ற பின் மெல்ல நடந்து வீதி கடக்கும்போது, சடுதியாய் எதிர்ப்படும் சிற்றூர்திக்குள்ளிருந்து துப்பாக்கிகள் உறுமும். ஆளையோ, அல்லது ஆடைகளையோகூட சன்னங்கள் துளையிடும். உரப்பைக்குள் இருக்கும் எங்கள் துப்பாக்கியின் சூடு தணியும்போது, நாலாவது வெளி கடந்து நாங்கள் ஓடிக்கொண்டிடுப்போம். எம்மை முந்திக்கொண்டு எதிரியின் சன்னங்கள் சீறும்.
 
“முற்றுகையிடுகிறான் பகைவன்” என நினைத்து அடித்து உடத்துக்கொண்டோ, அல்லது வலு அவதானமாக நகர்ந்தோ அவனைக் கடந்து மறுபக்கம் போய் “தப்பி வெளியேறிவிட்டோம்” என மகிழும்வேளை, இப்போதுதான் முற்றுகைக்குள்ளே வந்து சிக்கிப்போயுள்ளோம் என்பது தெரியவரும். நடந்த தவறு விளங்கும் போது தலை விறைக்கும்.
 
“பிரச்சினை இல்லாதவை” எனக் கருதி இரவில் படுக்கப்போகும் இடங்கள். அதிகாலையில் எதேச்சையாகச் சுற்றிவளைக்கப்படுகின்ற துரதிர்ஷ்டம் நிகழும் சர்ந்தர்ப்பவசமாகச் சிக்கிக்கொண்டுவிடுகிற அந்த விபரிக்க முடியாத சூழ்நிலைகளில் “வாழ்க்கை வெறுக்கும்”.
 
“எல்.ரீ.ரீ” எனக் கத்திக்கொண்டு இந்தியன் எட்டிப் பிடிக்கும்போது, “கதை முடிந்தது” என்று குப்பியைத் தொடும் வேளையில், இறுதி நேர முயற்சியாக உதறிப் பறித்துக்கொண்டு தப்பி ஓடுகிறபோது நெஞ்சுக்குள் தண்ணிவரும்.
இப்படியாக ஏராளமான மயிரிழைகள்.
 
சன்னம் துளைத்தவர்களையும், “சயனைட்” கடித்தவர்களையும் தவறவிட்டு தப்பித்து வந்தபோதெல்லாம், அந்த ஆருயிர் நண்பன் ஓரமாய் இருந்து கண்ணீர் சொரிவான்.
 
ஆனால், ஒருபோதும் அந்தப் புலிவீரனின் உள்ளம் தளர்ந்துபோனதில்லை.
 
நெருக்கடிகள் கூடிக்கூடி அழுத்திய போதெல்லாம் இருதிக்கொண்டே போனது அவனுடைய மனவுறுதி.
 
கற்பாறையப் பிளந்து முளையிடும் துளிராகி, இந்தியர்களின் கூடாரங்களுக்கு நடுவில் அவன் நிமிர்ந்தான்.
எதிரி வளைந்து நின்ற மண்ணில், கைவிடாத் துப்பாக்கியோடு கடைசி வரைக்கும் வலம்வந்து போராட்டத்தை உயிர்த்துடிப்போடு உயர்த்திச் சென்ற வேங்கை அவன்.
 
மரணம் அவனது உயிரை உரசிச் சென்ற போதெல்லாம் தப்பித்து மீண்டுவந்து, “என்ன நடந்ததோ…..?” என ஏங்கி நின்ற எங்களின் முன் கண்குளிரக் காட்சியளித்து, ஆச்சரியப்படுத்திய வீரன்.
 
கட்டைக் காற்சட்டையும் சேட்டுமாக அந்த “சின்னப் பொடியன்” தோற்றத்தில், இந்தியர்கள் பலதரம் ஏமாந்திருக்கிறார்கள்.
மூலைமுடுக்கெல்லாம் நுழைந்து இந்தியர்கள் ஒத்தியெடுத்த வேளைகளிளெல்லாம், அவன் நேசித்த மக்களால் பொத்திவைத்துப் பாதுகாக்கபட்ட குழந்தை.
 
எப்படி அவனால் நின்றுபிடிக்க முடிந்தது….?
 
அது அதிசயம் தான்!
 
ஆனால், அவனைப் பாதுகாத்தது வெறும் அதிஷ்டம் மட்டுமல்ல.
 
விவேகம், புத்திக்கூர்மை, மக்கள் செல்வாக்கு அவனுடைய சின்ன உருவம் இவற்றுக்கு மேலாக அவனுடைய உறுதியும், துணிச்சலும்.
இவைதான் அவனை உயிர்வாழச் செய்வித்தன.
 
அடுத்த காலை நிச்சயமற்றிருந்த அந்த நாட்களில் அவனோடுதான் நம்பிக்கையோடு தூங்கப் போகலாம். சாவு எங்களைத் தட்டி எழுப்பிய எத்தனையோ தடவைகளில் தப்பி வந்தது அவனால்தான் எனலாம்.
 
அப்போது யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த பொட்டம்மானும் தோழர்களும் அவனது “ஒழுங்கமைப்பு” களால் பல சர்ந்தப்பங்களில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
“மக்கள் நேசம்” அவனது உயரிய குணாம்சங்களில் ஒன்று. அவன் அவர்களில் வைத்த அன்பு அவர்களை அவனில் பாசம் வைக்கவைத்தது.
அந்த நெருக்கம் அலாதியானது; அதுதான் அவனுக்கு கவசமாகவும் இருந்தது.
 
அந்த நேசத்தின் தொடக்கம், அவன் போராளியான ஆரம்பம். அது 1984ம் ஆண்டின் இறுதிப்பகுதி. தனது பதினேழாவது வயதில் இயக்கத்தில் சேர்ந்தவன், அப்போது முதல் அந்த மக்களோடேயே வாழ்ந்தான். அந்த மக்களுக்குக் காவலாய் இருந்தான்.
 
அவன் மக்களை அணுகிய விதமே வித்தியாசமானது அதனால்தான் அவர்கள் அவனை நெஞ்சிலிருத்தி வைத்திருந்தார்கள்.
 
“மற்ற இயக்கங்களின் ஊர்கள்” என்று ஒதுக்கிய கிராமங்களில்தான் தூக்கமும், வேலையும். “மற்ற இயக்கங்களின் ஆட்கள்” எனப்பட்டவர்கள் வீடுகளில்தான் குளிப்பும், சாப்பாடும். எல்லா ஊரையும் எம்முடையதாக்கி, எல்லாப்பேரையும் எம்மவர்களாக்கினான்.
 
31.05.1967 அன்று தனலட்சுமி அம்மாவுக்கும், நவரத்தினம் ஐயாவுக்கும் பிறந்தவனுக்கு விக்னராஜன் என்று பெயரிட்டார்கள்.
 
தனது 16வது வயதிலேயே “புலிப்படைப் பொடியளுக்குப் பின்னால்” திரியத் துவங்கிவிட்டான்.
 
பாயில் தலையணை அடுக்கி ஆள்மாதிரிப் போர்த்திவிட்டு இரவில் காணாமல் போனவன்……. ஸ்ரான்லி கல்லூரியில் தம்பியையும், தங்கையையும் இறக்கிவிட்டு, உள்ளே வராமல் மிதிவண்டியைத் திருப்பிக்கொண்டு மற்றப்பக்கமாகப் போனவன்…. போய்ப்போய் வந்தவன்…………..
ஒரு நாள் ஒரேயடியாகப் போய்விட்டான்.
 
சூட் ஒரு அற்புதமான போராளி.
 
தனது ஆழகான ஆளுமையால் தோழர்களைத் தன்னோடு இறுகப் பிணைத்திருந்த நண்பன்.
 
 
கண்டிப்போடும், பரிவோடும் அரவணைத்து வருடிய இனிய காற்று. அவர்களில் அவன் பொழிந்த பாசமே தனி.
மனங்குழம்பிப்போகின்ற எந்தப் போராளியையும் ஆதரவோடு கதைத்துத் தெளிவூட்டுகிறபோது, அவனொரு பேராசான்.
 
முழுமையாக என்று சொல்லாவிட்டாலும் இயக்கத்தின் நீண்ட வரலாற்று ஓட்டத்தோடு பெருமளவு கலந்து, அமைதியாக, ஆரவாரமில்லாமல், தனது செயலால் வளர்ந்து மெல்ல மெல்ல உயர்ந்தவன்.
 
சூட் ஒரு சண்டைக்காரன் அல்ல, அதற்காக சண்டை தெரியாதவன் என்றும் சொல்லிவிட முடியாது. அதாவது அவன் தேர்ச்சிபெற்ற யுத்த வீரன் அல்ல.
அப்படியானால் அவன் முன்னுக்கு வந்தது………..?
 
அது சண்டைகளால் அல்ல;
 
சண்டைக்கு வெளியில் நின்று அவன் போராட்டத்திற்கு ஆற்றிய அளப்பரிய பணிகளால். தான் பணியாற்றிய துறைகளிலெல்லாம் தனக்கு கொடுக்கப்பட்ட வேளைகளில் பேர்சொல்லும் முத்திரைகளைப் பதித்து வளர்ந்த போராளி.
சண்டைக்கு வெளியில் நின்று எல்லாப் போராளிகளையும் போல அவனும் போர்க்களத்துக்குப் போகத்தான் துடித்தான். ஆனால், அவனது தேவை அவனை அதிலிருந்து தள்ளியே வைத்திருந்தது.
 
ஒரு விடுதலை வீரனின் போராட்டப் பணியானது இராணுவ அளவுகோலால் மட்டும் அளவிடப்பட முடியாதது. சண்டையிடுவதுதான் ஒரு விடுதலைப் போராட்டத்தில் பிரதான அம்சம். ஆனால், அது மட்டுமே போராட்டம் ஆகாது.
 
சண்டை என்பது, போராட்டம் நகர்த்திச் செல்லப்படும் பல்வேறு பரிமாணங்களில் ஒன்று. சண்டைகளில் நிற்காதபோதும், உண்மையான அர்ப்பண உணர்வோடு வாழ்ந்து, போராட்டத்தின் ஏனைய பரிமாணங்களோடு அபார திறமையாகக் காரியங்களைச் சாதித்த எத்தனையோ போராளிகளுள் அவனும் ஒருவன்.
இந்தியப்படை வெளியேற்றப்பட்டுவிட்டது.
 
இப்போது அவன் புலனாய்வுத்துறையில். பொட்டம்மானின் உற்ற துணைவர்களாக நின்று, இயக்கத்தையும், போராட்டத்தையும், தேசத்தையும் பாதுகாத்த முதன்மையான போராளிகளுள் ஒருவனாக, சூட் அல்லும் பகலும் ஓய்வற்றுச் சுழன்றான்.  துவக்கத்தில் யாழ். மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளனாகப் பணி.
 
அவன் பொறுப்பை ஏற்றபோது அங்கு இருந்த சூழ்நிலை வித்தியாசமானது. அதனால் மிக்க அவதானமாகவும், மிக்க நிதானமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவன் எச்சரிக்கையோடு அடிகளை வைத்தான்.
நேற்றுவரை எதிரியினால் முற்றுகையிடப்பட்டிருந்த அந்தப் பிராந்தியம். இன்று திடீரென, ஒருநாளில் எங்கள் கைகளுக்கு வந்துவிட்ட காலகட்டம் அது. இந்தியாவின் எச்சசொச்சங்கள் எங்கும் பரவியிருந்த நேரம். “மக்களே போல்வர் கயவர்” என்று அன்றொருநாள் வள்ளுவன் சொல்லியிருந்ததைப் போன்ற நிலைமை.
 
எவரிலும் சந்தேகம் எழக்கூடிய சூழல்.
 
மிகக் கவனமாக இனங்கண்டு பிரித்தறிய வேண்டும். எங்கள் புலனாய்வு நடவடிக்கைகளில் தவறு நேர்ந்து, அது மக்களைப் பாதித்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
 
புலனாய்வுத் தவறுகளினால் மக்கள் எவ்விதத்திலும் துன்பப்பட்டுவிடக்கூடாது, அத்தகைய அவதானத்துடன் செயற்படும்போது நடவடிக்கைகளில் நாங்கள் காட்டும் நிதானமானது, துரோகிகளுக்கு வாய்பளித்து அவர்கள் சுலபமாகச் செயற்பட இடமளிக்கவும்கூடாது.
இப்படிப்பட்ட சிக்கலான ஒரு சூழ்நிலையில் பொறுப்பெடுத்து, மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் தனக்குரிய பணியை சூட் செய்து முடித்தான்.
நாட்கள் உருண்டன.
 
புலனாய்வுத்துறையின் முக்கியமான ஒரு போராளியாக….,
அதன் தாக்குதற் படைப்பிரிவுக்குத் தளபதியாக…..,
இயக்கத்தின் “கரும்புலிகள்” அணி ஒன்றுக்குப் பொறுப்பாளனாக……..,
சூட் படிப்படியாக உச்சத்துக்கு வந்தான்.
இயக்கத் தலைமையினது அதீத நம்பிக்கைக்கு அவன் பாத்திரமானான்.
முக்கியத்துவம் மிக்க ஒரு கரும்புலித் தாக்குதல்.
இலக்குப் “பெரியது”
எனவே, ஒழுங்கமைப்பும் பெரிதாக இருந்தது.
 
திட்டம் திட்டப்பட்டபோது பொட்டம்மான் சூட்டைத்தான் தெரிந்தெடுத்தார்.
 
தியாகமும், துணிச்சலும், இலட்சிய வேட்கையும் போக… மதுநுட்பமும், விவேகமும். செயற்திறனும் அதிகமாகத் தேவை. இவையெல்லாம் ஒருங்கிணைந்தவன் சூட்.
 
ஆனால், தலைவரோ ஆளை மாற்றசொன்னார்.
 
இந்தப் பணியைவிடவும் அதிகமாகப் போராட்டத்துக்கு அவன் பயன்படுவான் என்று அவருக்குத் தெரிந்தது உண்மைதான்.
 
 
ஆனாலும், தாக்குதலின் முக்கியத்துவத்தையும், அதன் பிசகாத, துல்லியமான வெற்றியையும் கருத்திற்கொண்டு பொட்டம்மான் சூட்டைத்தான் வலியுறுத்தினார்.
 
இருந்தபோதும், தலைவரது கருத்திற்கிணங்க கடைசியில் முடிவு மாற்றப்பட்டது.
அதன்பின்னர்,
 
எங்களது இன்னுமொரு கரும்புலி வீரன், அந்த “இலக்கை” மிக வெற்றிகரமாகத் தாக்கி அழித்து வரலாற்றைப் படைத்தான்.
 
பூநகரிச் சமருக்குப் புறப்படும்போது சூட் தேர்ச்சிபெற்ற ஒரு சண்டைத் தளபதியாக விளங்கினான்.
 
ஆனால், அவன் இராணுவ ரீதியில் மேலோங்கியதானது நீண்டகால அனுபவத்தில் படிப்படியாக வளர்ச்சிகண்டு அல்ல.
நன்றாக இனங்காணப்பட்டு, திடீரென அவனுக்குப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. குறுகியகால இராணுவப் பணியையே அவன் ஆற்றினான்.
ஆனால், அந்தச் சொற்ப காலத்துக்குள்ளேயே பெருந் தளபதிகளினது மதிப்பையும், பாராட்டையும் அவன் பெற்றுவிட்டிருந்தான். அது ஒரு இலேசான காரியமல்ல.
 
அவனது குறுகியகால இராணுவ வளர்ச்சி அசாத்தியமான ஒரு சாதனை.
பூநகரி பெரும் போர்க்களம்.
 
பல்வேறு படையணிகள், பல்வேறு சண்டை முனைகள், பல்வேறு வழிமுறைகள்.
பரந்த ஒரு பிரதேசத்தில் எழுந்து நின்ற எதிரியின் பெரும் படைத்தளம் ஒன்றின்மீது அதன் எல்லா அரண்களிலும் சமநேரத்தில் தாக்கி, புலிகள் நிகழ்த்திய மிகப்பெரிய படையெடுப்பு.
 
ஒரு முனையில் சூட்டின் படையணி.
 
எதிரியின் அரண் தொகுதி ஒன்று சூட்டினது படையணிக்குரிய இலக்கு. அதன் அருகிலிருந்த இன்னொரு அரண்தொகுதி லெப்.கேணல் குணாவின் படையணிக்குரிய இலக்கு.
 
இரண்டு அணிகளும் தமது இலக்குகளை வீழ்த்திய பின் ஒன்றிணைந்து பிரதான தாக்குதலணி ஒன்றுக்குத் தோள் கொடுக்கவேண்டுமென்பது திட்டம்.
ஆனால் விஷயம் பிழைத்துவிட்டது. பூநகரி வெற்றியின் முதல் வித்தாக, சண்டையின் ஆரம்ப நிமிடங்களிலேயே குணா வீழ்ந்து போக, அந்தப் பகுதியில் சண்டை திசை மாறிவிட்டது.
 
தமது இலக்கைக் கைப்பற்றிய சூட்டினது அணி முன்னேறியபோது, குணாவினது பகுதி பிசகிவிட்டிருந்தது. எதிரி அங்கு தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தான்.
 
துணை சேரவேண்டிய அணிக்குத் துணை கொடுக்கவேண்டிய நிலை.
மூர்க்கத்தனமான தாக்குதல் குணாவுக்குரிய பகுதிமீது ஆரம்பித்தது.
இறுக்கமான சண்டை.
 
ஆர் பி ஜி குண்டின் சிதறல்பட்டு அவனது எம்.16 உடைந்து போக, அருகில் நின்ற தோழனுடன் ரி.56ஐ வாங்கிக்கொண்டு சூட் முன்னேறினான்.
 
கடுமையாகத் தாக்கிக்கொண்டிருந்த எதிரியின் பலமான அரணொன்றை சூட் ஆக்ரோசமாக நெருங்கினான்……. தனி ஆளாகப் பாய்ந்தான்.
அதிரிக்கு அருகில் அவன் முன்னேறினான், ……… மிக அருகில் …… போய்விட்டான் …… போனவன் திரும்பி வரவில்லை:
 
அன்பு, குணா, நவநீதன், பாமா, றூபன், கணேஸ், கோபி, அவன்…… என்று 458 தோழர்கள்….. வெற்றியைத் தந்துவிட்டு வராமலே போய்விட்டார்கள்!
தமிழீழம் இப்போது தலைநிமிர்ந்து நிற்கிறது; அந்த மைந்தர்களின் நினைவோடு; அவர்கள் பெற்றித் தந்த வெற்றியின் பெருமிதத்தோடு.
இப்போது………. நம்பிக்கையோடு காத்திருக்கிறது…………..
அடுத்த வெற்றிக்காக!
 
458 தோழர்கள்
 
லெப்.கேணல்
குணா
சுந்தரம் விஜயராசா
கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்.கேணல்
அருணன் (சூட்)
நவரட்ணம் விக்கினராஜன்
பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்.கேணல்
நவநீதன் (கணேஸ்)
தில்லையம்பலம் திருலோகநாதன்
கனகராயன்குளம் வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
 
கடற்கரும்புலி மேஜர்
கணேஸ்
நாகநாதி ஜீவநேசன்
புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 மேஜர்
சத்தியேஸ்வரன்
சிவகுரு மகேந்திரராசா
மீசாங்கேணி, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 மேஜர்
பிரகாஸ்
பரமானந்தன் அருள்நாதன்
வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
 
 மேஜர்
ஜெகநாதன்
பெருமாள் சுந்தரலிங்கம்
சாளம்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
 
 மேஜர்
இமயன் (மிரேஸ்)
முத்துராசா கந்தசாமி
திருகோணமலை
வீரச்சாவு: 11.11.1993
 
 மேஜர்
குமாரவேல் (குமரேஸ்)
மைக்கேல் அன்ரனி
ஈச்சமோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 மேஜர்
வித்தியா
பாலசுப்பிரமணியம் தபோஜினி
கோண்டாவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 மேஜர்
தயாளினி
பாலசுந்தரம் சுபா
5ம் வட்டாரம், சேனையூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 11.11.1993
 
 மேஜர்
நித்தியா (ஜிகிர்தா)
தேவசுந்தரம் விக்கினேஸ்வரி
உள்ளை, பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 11.11.1993
 
 மேஜர்
இளஞ்செழியன் (அலெக்ஸ்)
செல்லத்துரை பிரதீபராஜன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 மேஜர்
இளங்கோவன்
சுப்பிரமணியம் இராசேந்திரன்
8ம் வட்டாரம், பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், திருகோணமலை
வீரச்சாவு: 11.11.1993
 
 மேஜர்
மைக்கல்
செல்வராசா யோகராசா
திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 11.11.1993
 
 மேஜர்
குமணன்
செல்லையா நவரத்தினம்
குருணாகல், சிறிலங்கா
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
கயலவன் (அலெக்ஸ்)
ஆனந்தராஜா மிதிலன்
பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
லொஜிட்ராஜ்
சங்கப்போடி உதயராஜா
தம்புலுவில், அம்பாறை
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
சற்சுதன் (வொனி)
புவிராஜசிங்கம் வாகீசன்
நொச்சிமுனை, கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
பவானந்தகுமார் (வின்சன்)
பெரியதம்பி யுவராசா
தாமரைக்கேணி, வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 
 கப்டன்
நக்கீரன்
தியாகராசா சசிகரன்
ராஜதுரைக்கிராமம், ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
செந்தமிழரசு (சிவராசா)
தர்மலிங்கம் சுரேஸ்காந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
பவான்
முனியான்டி துரையன்
2ம் யூனிற், செங்கப்படை, இலுப்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
ரங்கநாதன் (ரங்கன்)
கனகசபை நகுலானந்தராசா
வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
திலகர்
இராமநாதன் நித்தியானந்தன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
செந்தூரன்
வேலுப்பிள்ளை உதயகுமார்
7ம் வட்டாரம், குமுழமுனை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
பிறைசூடி (மதீஸ்)
சுப்பிரமணியம் சுவேந்திரன்
காந்தி கிராமம், கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
விஸ்வநாதன் (கோகிலன்)
முருகன் கனகராசா
மானுருவி, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
பழனிவேலன்
சங்கரப்பிள்ளை பஞ்சேந்திரன்
வேலணை வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
தென்னவன் (பிரனா)
கனகசிங்கம் தெய்வேந்திரம்
கட்டைபறிச்சான், சேனையூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
செழியன் (நெல்சன்)
வடிவேலு சிறீதரன்
ஆரியம்பொந்து, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
இராவணன் (கோணேஸ்)
மரியதாஸ் இராயு
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
இளம்பரிதி (விஸ்வநாத்)
ஆறுமுகம் ரஜீந்திரன்
ஊரெழு மேற்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
கண்ணன் (தினேஸ்)
தில்லையம்பலம் தர்மலோகன்
ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
தூயமணி (நஜிபுல்லா)
தளையசிங்கம் உமாசங்கர்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
ஈழமாறன் (தினேஸ்)
சுப்பிரமணியம் இந்திரகுமார்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
பேரின்பன் (சுருளி)
இராசு வசந்தமோகன்
உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
கதிரொளி
குலசிங்கம் மகிமதாஸ்
அச்சுவேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
காஞ்சனா
செபமாலை ஜெபதேசன்
பெரியநீலாசேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
குகநாதன்
பொன்னுச்சாமி விசுவநாதன்
பியர், தலைமன்னார், மன்னார்
வீரச்சாவு: 11.11.1993
 
 
 
 கப்டன்
கவி
யாக்கோப்பு சேகரன்
உயிர்த்தராசன்குளம், மன்னார்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
குருவேல்
சற்குருதாசன் செல்வநேசன்
சிவநகர், பரியாரிகண்டல், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
கோமான்
சொலமன் யோகேந்திரன்
அனுராதபுரம், சிறிலங்கா
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
கிளிமொழி (கிறிஸ்ரி)
பேனாட் ஜெயராணி
தாழ்வுபாடு, மன்னார்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
பூமகள் (விஜயா)
செல்லையா உதயராணி
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
கலையரசி (முகேசா)
காளியப்பு தங்கேஸ்வரி
கோபாலபுரம், நிலாவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
மாலதி
ஐயம்பிள்ளை நந்தினி
சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
துளசிராம்
சின்னமணி தாமரைச்செல்வி
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
தேவகி (தேவகஜி)
இரத்தினம் சுபத்திரா
கீரிமலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
சுதர்சனா
பாலசிவராஜா விஜயலட்சுமி
கொக்குத்தொடுவாய், மணலாறு
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
நவமணி (கொன்சலா)
தனபாலசிங்கம் தனலட்சுமி
நாகர்கோயில் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
ஈழவாணி
சுப்பிரமணியம் ஜெயமலர்
செங்கற்படை, இரணைஇலுப்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
கரிகாலன் (மஞ்சு)
தர்மரட்ணம் பிரபாகரன்
அத்தியடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
சூரியன் (ரெனோ)
விநாயகமூர்த்தி சத்தியகரன்
மறவன்புலவு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
கற்பகன்
நடனசிகாமணி சீராளன்
இன்பருட்டி, அல்வாய் வடக்கு,யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
மயூரன்
தியாகராஜா பாலசபாபதி
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
குட்டித்தம்பி
பால்சாமி வின்சன்ஜெயபால்
காத்தன்குளம், வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
செம்பியன் (நசீர்)
தங்கராசா சீறீமுருகன்
இலங்கைதுறைமுகத்துவாரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
புலவன் (கபூர்)
சாமித்தம்பி லோகநாதன்
வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 கப்டன்
ஈழவாசன்
கதிரமலை ஜெயபாலசிங்கம்
கைதடிச்சந்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 
 கப்டன்
கருவேலன்
வெள்ளைச்சாமி ஆறுமுகம்
09ம் கட்டை, உயிலங்குளம், மன்னார்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
செல்வமலர் (பிருதுவி)
இரத்தினசிங்கம் பரணி
மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
மணி (மைனா)
செல்லையா வசந்தி
புதுப்பிளவு, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
இளவரசி
செல்லையா கலாநிதி
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
அமலா (அமரா)
சண்முகம் ஜெயா
வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
சௌந்தரி
தம்பிராசா இந்துமதி
குளங்கால், மல்லாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
சாம்பவி
தியாகலிங்கம் சுசரிதா
மாட்டீன் வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
நளாயினி
அந்தோனிப்பிள்ளை கௌசலாதேவி
இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
பத்மசுகி
சிவபாதம் சிவாஜினி
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
சுபானந்தி
தர்மலிங்கம் சுஜாந்தினி
தண்ணீருற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
மலையரசி
சீனித்தம்பி குமாரி
தளவாய், பன்குடாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
சூரியா (சிந்துஜா)
வேலுப்பிள்ளை ஜெயலட்சுமி
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
தூயவள்
செல்லத்துரை தவராணி
2ம் யூனிற், வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
அம்பிகா
குமாரசாமி கமலாம்பிகை
தனங்கிளப்பு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
நாமகள்
இராசர் வினோதினிதேவி
ஊரெழு கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
மயிலன்
சுந்தரலிங்கம் சிறிரஞ்சன்
வேம்படி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
பாபு
வினாசித்தம்பி பாஸ்கரராசா
முள்ளிவாய்க்கால் கிழக்கு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
குபேந்திரன் (குயின்ரஸ்)
அர்ச்சுனன் கணேஸ்குமார்
தாமரைக்குளம், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
ஊரான் (நிக்சன்)
பாலசுந்தரம் பிரபாகரன்
சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
தயானந்தன்
ஜெபமாலை தோமாஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993
 
 
 
 லெப்டினன்ட்
தணிகைச்செல்வன்
அருளம்பலம் ஜெகநாதன்
மைலாம்பாவெளி, தன்னாமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
நீலவண்ணன் (தனம்)
கந்தையா மகேந்திரன்
இமையாணன், உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
தணிகைவேலன் (கிருபா)
கந்தசாமி கிருபாகரன்
மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
அன்பனார்
அல்போன்ஸ் செபநாயகம்
நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
நிலவேந்தன் (நடேஸ்வரன்)
சுப்பிரமணியம் கண்ணன்
புலோலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
அம்பி (றெக்ஸ்)
கிருஸ்ணபிள்ளை உதயசீலன்
5ம் குறிச்சி, ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
சின்னையா (வீமன்)
பொன்னையா மோகானந்தன்
மண்டூர், பாலமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
ஆதித்தன் (இளங்கதிர்)
செல்வம் விஜயகுமார்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
தானன் (விஜி)
முத்துவேல் மூர்த்தி
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
அன்பு (கருணா)
சுப்பிரமணியம் வனிதகுரு
அம்பன், குடத்தனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
மாவாணன்
வேலு சங்கர்
செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
எழிலரசன் (மோகன்)
சின்னத்தம்பி சந்திரசேகரம்
கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
செய்யவன் (நேரு)
கணபதிப்பிள்ளை தங்கரூபன்
பெரியபளை, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
வேந்தன்
சுப்பையா பேரின்பமூர்த்தி
மந்துவில் மேற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
நந்தன்
மணியம் தீசன்
மீசாலை தெற்கு, மீசாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
கலையரசன்
வேலாயுதம்பிள்ளை மாலதன்
புத்தூர்சந்தி, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
பழனிவேல்
முத்துலிங்கம் சிறிதரன்
செட்டிப்பாளையம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
பாபு
கணபதி சிறிகாந்தராசா
யாக்கரை, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
இளங்குயில் (ஜமுதா)
காத்தலிங்கம் விஜயலட்சுமி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
மகிழினி
அருள்வாசகம் சகாயபாமா
மன்சூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 
 
 லெப்டினன்ட்
தாமரை
ஜெயவீரசிங்கம் கோகிலா
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
மலர்விழி (ஜானு)
துரைராஜா வனதா
படித்தமகளிர் குடியேற்றத்திட்டம், மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
தேவமணி (யூரி)
இராசையா அன்னலிங்கம்
ஊத்துச்சேனை, வடமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
பிறையாளன்
செபஸ்ரியாம்பிள்ளை மரியதாஸ் புவேந்திரன்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
ஆறுமுகம்
சோதிநாதன் கஜேந்திரன்
சித்தங்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
தயாபரன்
சோமகாந்தன் சிவகுமார்
கற்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
மலரோன்
அருமைநாயகம் முரளிதரன்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
கலைஞன் (ரகீம்)
சுப்பிரமணியம் சத்தியசீலன்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
வாகீசன்
தையல்பாபு செல்வகுமார்
கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
சித்தார்த்தன் (கார்த்திக்)
வெள்ளைக்குட்டி சுந்தரலிங்கம்
2ம் வட்டாரம், சேனைக்குடியிருப்பு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
மிதுனன்
திருநாவுக்கரசு மகேஸ்வரன்
பழம்பாசி, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
அன்பழகன்
சோமகாந்தன் சிவகுமார்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
வசந்தகுமார் (குமரன்)
தம்பிப்பிள்ளை விநாயகமூர்த்தி
37ம் கிராமம், பாலையடிவெட்டை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
ஈஸ்வரன்
கந்தசாமி சிவராசா
கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
கனியன் (நிசாந்)
ஆரோக்கியநாதன் சில்லன்சுஜிவன்
சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
இராசவேல் (விவே)
கொஞ்சிப்போடி அன்னசேகரம்
மகிளூர், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
ஆராதனா
காராளசிங்கம் றெஜிதா
மயிலியன்குளம், அராலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
அன்புமணி (சுனில்)
செல்லையா வால்ஜெயக்கொடி
துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
உதயன்
பரஞ்சோதி பகீதரன்
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
ரமேஸ்குமார்
தேவசகாயம் மரியதாஸ்பிள்ளை
செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 
 
 லெப்டினன்ட்
அழகன் (நசார்)
மருசால் கிறிஸ்ரின்
பெரியகோமரசன்குளம், வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
பிரதீபன்
ஐயம்பிள்ளை ஆறுமுகம்
சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
கறுவா(கருணா)
குமாரசாமி புவனகுமார்
ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
வாசுதேவன்
முத்துலிங்கம் பாலச்சந்திரன்
கூழாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
மூர்த்தி
கனகலிங்கம் தெய்வேந்திரன்
கோயில்குஞ்சுக்குளம், பாலமோட்டை, ஓமந்தை
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
வேந்தன்
இறேனியாஸ் அலைநாதன்
கண்டி வீதி, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
மெய்யப்பன்
யோகராஜா சுரேஸ்குமார்
சுதுமலை வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
சுடரொளி (சீமான்)
ஜீவரட்ணம் ஜெகதீபன்
தாளையடி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
பொறுப்பன் (காண்டீபன்)
இளையதம்பி பாஸ்கரதாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
மறவன்
அந்தோனிப்பிள்ளை லூட்றென்சன்
நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
நெடுஞ்செழியன்
தாமோதரம்பிள்ளை குணரட்ணம்
சுண்ணாகம் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
சமுத்திரன்
சந்திரசேகரபிள்ளை குமார்
இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
கவியரசன்
இராசதுரை குகேந்திரன்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
குகதா
அம்பலம் புஸ்பராணி
கதிரிபாய், அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
விமலா
தர்மலிங்கம் விஜயராணி
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
சுகந்திரா
செல்வராசா அழகானந்தி
புலோலி மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
வரோதயன்
பூபாலசிங்கம் சுதாகரன்
6ம் வட்டாரம், நற்பிட்டிமுனை, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
வித்தியானி
தியாகராஜா சிறிதரன்
பார் வீதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
அசோகன்
பாஸ்கரன் தனபாலன்
01ம் வட்டாரம், திக்கோடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
ஐங்கரன்
கனகசபை புஸ்பராசா
01ம் குறிச்சி, தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
வேலு
தங்கராசா லக்ஸ்மன்
07ம் வட்டாரம், துறைநீலாவணை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
பத்தினியன் (சுதா)
நடராஜா தர்மக்கொடி
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
நவக்குமார் (கௌசிகன்)
கேதாரப்பிள்ளை விஜயகுமார்
கன்னங்குடா, கொத்தியாவல, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
அரசழகன் (அநாழகன்)
வீரசிங்கம் மனோலிங்கம்
4ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
இராஜேந்திரன்
விநாயகம் மாறன்
களுவாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
கமலநேசன்
கணபதிப்பிள்ளை மருகேஸ்
வீரமுனை, சம்மாந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
அதர்மலிங்கம் (காந்தன்)
சின்னத்துரை கேதாரலிங்கம்
வம்மிவெட்டுவான், கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
ரங்கன்
சிவசம்பு டோமசிரி
பளுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
குணம்
தங்கமணி விமலன்
மாவடிவேம்பு, சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
பாலகுமார்
கணபதிப்பிள்ளை புஸ்பராஜா
தேற்றத்தீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
 
 லெப்டினன்ட்
சந்திரமணி
சோமசுந்தரம் காபாலகிருஸ்ணன்
சின்னவத்தை, வைக்கி எல்லை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
இணைப்பு: 
செய்திகள்