நியமனங்கள் போலியானவை!

Wednesday June 13, 2018

யாழ்ப்பாணத்தில், 63 பேருக்கு கொடுக்கப்பட்ட நியமனங்கள் போலியானவை என, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வடமராட்சி கல்வி வலயத்துக்கு உட்பட்ட மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் தேவரையாளி இந்து கல்லூரியில் அமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழா, இன்று (13) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கல்வி சார ஊழியர்கள், முகாமைத்துவ உதவியாளர், பாடசாலைகளுக்கான நியமனங்கள் என 63 பேருக்கு தேசிய பாடசாலைகளில் நியமனம் கொடுக்கப்பட்டதாக அறிந்தேன்.
 
“இது, பிரதமர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லப் பிரேரணைக்கு கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவளித்ததற்காக சந்தோஷமாகக் கொடுக்கப்பட்டதாகவே, நான் நினைத்தேன்.

“ஆனால் இது எல்லாமே பொய். இது தொடர்பில் விசாரித்தோம். இங்குள்ள யாரோ மூன்று, நான்கு இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு மேலதிக கல்வி செயலாளரின் இறப்பர் முத்திரையை இட்டுக் கொடுத்துள்ளார்கள்” என்றார்.