நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்

திங்கள் நவம்பர் 14, 2016

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இருந்து 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 11  மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. 

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அனைத்து குலுங்கின. பல வீடுகள் சேதமடைந்தன. வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள், அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடினர்.

அடுத்தடுத்து நில அதிர்வுகள் தொடரும் என்ற எச்சரிக்கையால் யாரும் வீடுகளுக்கு செல்லாமல் தெருவிலேயே இரவுப்பொழுதை கழித்தனர். இந்த நிலநடுக்கம்  காரணமாக ஏற்பட்ட சேத விபரம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சில  பகுதிகளில் தாக்கியதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

 கடற்கரையை ஒட்டிய பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு  அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை பகுதியில், 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது கடலில் சிறிய  அளவிலான சுனாமி அலைகளும் ஏற்பட்டன.