நியூசிலாந்தில் 3 ஈழத் தமிழர்கள் பலி!

December 23, 2016

நியூசிலாந்து நாட்டின் சவுத் ஒக்லாந்துப் பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று ஈழத் தமிழர்கள் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. இந்தச் விபத்துச் சம்பவத்தின்போது கைலேஸ், தனபாலசிங்கம் என்ற அகதிகள் நலனுக்கான சட்டவாளர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

அவரது மனைவி (39 வயது), மகன் (5 வயது), மாமியார் (66 வயது) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். கைலேஸ் தனபாலசிங்கத்தின் மாமனாரும், மகள் (11) காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் வீட்டுக்குள் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து வெளியே ஓடி வந்த சிறுமி தகவல் வெளியிட்டதையடுத்து. அயலவர்கள், தீயணைப்பு படையினரை உதவிக்கு அழைத்தனர்.

தீயணைப்புப் படையினர் வந்து உயிரிழந்தவர்களின் சடலங்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டனர். கைலேஸ் தனபாலசிங்கம், 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிறீலங்காவில் இருந்து அகதியாக வந்து சவுத் ஓக்லாந்தில் குடியேறியிருந்தார்.

செய்திகள்
ஞாயிறு யூலை 23, 2017

சிறீலங்கா அரசின் தடுப்புக் காவலில் தமிழர்கள் தொடர்ந்தும் கொடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதையிட்டுத் தனது ஆழ்ந்த கரிசனையைப் பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின

வெள்ளி யூலை 21, 2017

பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெற்ற Government and Politics in Sri Lanka: Biopolitics and Security நூல் வெளியீட்டு நிகழ்வில் அதன் நூலாசிரியர் ஆற்றிய உரையின் காணொளித் தொகுப்பு:

 

வெள்ளி யூலை 21, 2017

சிறீலங்காவை இனநாயக அரசாக நிறுவிப் பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெற்ற கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா எழுதிய Government and Politics in Sri Lanka: Biopolitics and Security நூல் வெளியீட்டு நிகழ்வில் ஆற்றப

வியாழன் யூலை 20, 2017

ஈழத்தமிழர்கள் தன்னாட்சியுரிமையைப் பெறுவதற்குத் தமது அரசாங்கமும், மக்களும் முழுமையான ஆதரவை நல்குவதாக ஈராக்கின் குர்து மாநில அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான அரசியல் விவகாரப் பணிப்பாளர் கெசாரோ அஜ்கா

வியாழன் யூலை 20, 2017

தாராண்மை சனநாயக அரசுகளின் கட்டமைப்புக்களைக் கொண்டிருக்கும் சிறீலங்கா, ஒரு சனநாயக அரசு அல்ல என்று பிரித்தானியாவின் நிழல் நிதித்துறை அமைச்சர் ஜோன் மக்டொனல் (John McDonnell), மற்றும் முன்னாள் வணிகத்து

வியாழன் யூலை 20, 2017

தன்னை சனநாயக அரசாகக் காண்பிக்கும் சிறீலங்கா, சாராம்சத்தில் முழு அளவிலான பௌத்த சிங்கள இனநாயக அரசு என்பதை நிறுவும் நூல் வெளியீட்டு நிகழ்வு பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்றுள்ளது.

செவ்வாய் யூலை 18, 2017

தமிழின உணர்வாளரும், சிறந்த ஓவியரும், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழின அழிப்பை..

திங்கள் யூலை 17, 2017

கறுப்பு யூலை இனப்  படுகொலைகள் இடம்பெற்று முப்பது நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. பல அரசுகள் மாறிமாறி ஆட்சிக்கு வந்துவிட்டன அன்றைய நிலைமைகள் அவ்வாறே இன்றும், அதே இனவெறி நோக்கில்!  அன்று சிறைக்குப்பொற