நியூசிலாந்து கடலில் எழுந்த 78 அடி உயர ராட்சத அலைகள்!

சனி மே 12, 2018

நியூசிலாந்து நாட்டில் சமீபத்தில் கடலில் எழுந்த 78 அடி உயர ராட்சத அலைகள் மிகப்பெரிய ராட்சத அலைகள் என்ற சாதனையை படைத்துள்ளது. நியூசிலாந்து நாட்டின் கேம்பல் தீவு அருகே கடந்த 8-ந்தேதி கடலில் கடும் புயல் காற்று வீசியது. அப்போது அங்கு 23.8 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன.

அதாவது 78 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்துள்ளன. அவை 8 மாடி அளவு உயரத்துக்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. கடல் அலைகளின் உயரத்தை ஆய்வு செய்யும் ‘பை’ எனும் நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

இது உலகின் தென் துருவத்தில் கடலில் எழுந்த மிகப்பெரிய ராட்சத அலை என வர்ணிக்கப்படுகிறது. இதற்கு முன்பு தென் துருவ கடல் பகுதியில் 2012-ம் ஆண்டில் 22.03 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்தன. அதுவே மிகப்பெரிய ராட்சத அலை என்ற சாதனையை படைத்தது.

இந்த நிலையில் சமீபத்தில் எழுந்த ராட்சத அலைகள் அந்த சாதனையை முறியடித்ததாக கடல் ஆராய்ச்சி மூத்த நிபுணர் டாம் துரந்த் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் கடந்த 1958-ம் ஆண்டில் கலாஸ் காவில் லிகுயா வளைகுடாவில் நிலநடுக்கமும் ஏற்பட்டது. அப்போது 30.5 மீட்டர் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்து பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.