நியூசிலாந்து மண்ணில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கரும்புலிகள் நாள்! - 2018

யூலை 10, 2018

தமிழீழ கனவை சுமந்து விடுதலை வேள்வித்தீயில் தம்மைத் தாமே அழித்திட்ட அதிசய பிறவிகளை வீரமறவர்களை வணங்கிடும் புனித நாள். இப்புனித நாளில் தமிழீழ விடியலுக்காய் சரித்திரமாகி போன கரும்புலி வேங்கைகளுக்கு  வீரவணக்கம் செலுத்தவேண்டும் என்ற வகையில் நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஓக்லாந்து நகரில் 08-07-208 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை Murray halberg park  (Range View Rd, Mount Albert, Auckland 1025) மண்டபத்தில் வீரவணக்க நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.  

மாலை 6.00 மணியளவில்   அகவணக்கத்துடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகியது. பொதுச்சுடரினை கரும்புலி ஆகிய இலக்கியா அவர்களின் சகோதரர் சுதர்சன் அவர்கள் ஏற்றி வைத்தார்.  அதனைத் தொடர்ந்து லக்சன் அவர்களின் கரும்புலிகள் பற்றிய கவிதை  இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து கரும்புலிகளுக்கு மலரஞ்சலியுடன் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் ஜெகன் அவர்களால் கரும்புலிகள் பற்றிய பேச்சு இடம்பெற்றது. 

கரும்புலிகளின் நினைவலைகள் மீட்டுப்பார்கப்பட்டு கரும்புலிகளின் நினைவுகளோடு பி.ப 6.40  மணியளவில் கரும்புலிகள் நாள் உணர்வு பூர்வமாக நிறைவு பெற்றன.

இணைப்பு: 
செய்திகள்
திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.  

புதன் செப்டம்பர் 12, 2018

கலைபண்பாட்டுக்கழகம் டென்மார்க் 10.09.18 அன்று உத்தியோகபூர்வமாக “அகம்” கலையகத்தை திறந்து வைத்துள்ளனர்.  

புதன் செப்டம்பர் 12, 2018

ஈழ தமிழ் பெண் சுபா உமாதேவன் சுவிட்சர்லாந்தின் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட சர்வதேச அமைப்பின் 

புதன் செப்டம்பர் 12, 2018

தமிழின அழிப்புக்கு நீதி கோரி தமிழ் மக்களின் விடிகின்ற நாளுக்காய் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் மற்றும் தமிழ் வான் கண்காட்சி ஊர்திப் பயணம் மிக எழுச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.