நிறம் மாறிய செவ்வாய்க்கிரகம்!

வியாழன் ஜூன் 21, 2018

கடந்த ஒரு வாரமாகச் செவ்வாய்க் கிரகத்தைத் தாக்கிவரும் புழுதிப் புயலால் அந்த கிரகம் நிறம் மாறியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் அதிகரிக்கும்போது அது தன்னுடன் மணலையும் சேர்த்துக்கொண்டு மேலே வருவது புழுதிப் புயல் என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் புழுதிப் புயல் வறண்டப் பகுதிகளில் மட்டுமே அதிகம் ஏற்படும். குறிப்பாக சஹாரா பாலைவனம், இராக், பாகிஸ்தான் போன்ற இடங்களில் இது சாதாரணமாக நிகழும்.

இதே போன்று செவ்வாய்க் கிரகத்தையும் புழுதிப் புயல் தாக்க உள்ளதாகச் சில நாள்களுக்கு முன்னர் நாசா அறிவித்திருந்தது. மேலும், அதைக் கண்காணிக்க கியூரியாசிட்டி ரோவர் (Curiosity Rover) என்ற செயற்கைக்கோளையும் பயன்படுத்தி வருகிறது. இந்தச் செயற்கைக்கோள் 2007-ம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்தைப் புழுதி புயல் தாக்கிய பிறகு, 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் அனுப்பப்பட்டது.

தற்போது செவ்வாயைத் தாக்கிவரும் புழுதிப் புயலை படமெடுத்துள்ளது ரோவர் செயற்கைக்கோள். அந்தப் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. இந்தப் புழுதிப் புயலின் காரணமாகச் செயற்கைக்கோள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், செவ்வாய்க் கிரகத்தில் ஏற்படக்கூடிய புழுதிப் புயல் பற்றி மனிதர்கள் மிகத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முதல் முறையாக இந்தக் கியூரியாசிட்டி ரோவர் செயற்கை கோள் உதவியுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

இடது பகுதியில் இருக்கும் படம் கடந்த மே மாதம் 21-ம் திகதி எடுக்கப்பட்டது. வலது பக்கம் உள்ள புகைப்படம் ஜூன் 17-ம் திகதி எடுக்கப்பட்டுள்ளது.