நீங்கள் மட்டும்  கம்பீரமாய் நிற்கிறீர்களே!

Saturday November 24, 2018

கார்மேகம் சூழ்ந்த
எமது தாயகத்தில்
எங்களை எதிரிகள் 
அழித்தபின்பும் 
நீங்கள் மட்டும் 
கம்பீரமாய் நிற்கிறீர்களே 
உங்களை பார்த்தாவது 
நாம் எழுச்சி கொள்வோம் 
இந்த நாட்களில் 
கார்த்திகை பூவே 
உன் இயற்பெயர்
செங்காந்தள் மலர் 
அதனால் தான் 
என்னவோ 
எம் தலைவன் 
தனதுஅணிசேரும் 
வீரர்களுக்கும் 
வீராங்கனைகளுக்கும்
பெயர் மாற்றினாரோ?

றொப்