நீட் அனிதாவாக மாறிய ஜூலி!

March 05, 2018

அதிக மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் ஜூலி நடிக்க இருக்கிறார்.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் பலனளிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் தன்னால் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லையே என மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.

இவரது தற்கொலை தமிழ்நாட்டையே உலுக்கியது. அனிதா மரணமடைந்து தற்போது ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில் அவரது பெயரில் ஒரு படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு ‘டாக்டர் எஸ்.அனிதா எம்பிபிஎஸ்’ என பெயரிட்டு அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அனிதா கதாபாத்திரத்தில் ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கவுள்ளார். அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. 

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் June 19, 2018

 11 வருடங்கள் கழித்து இப்போது தான் அவர் நடித்து வெளிவந்த  இரும்புத்திரை  படம் மிகப் பெரிய வசூல் படமாக அமைந்துள்ளது