நீதிக்கான ஈருருளிப் பயண கவனயீர்ப்பு!

செப்டம்பர் 12, 2018

கடந்த 1ம் திகதி பிரித்தானியாவில் ஆரம்பித்த மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணமும், பிரான்சில் இருந்தது கடந்த 3 ஆம் திகதி அன்று பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பமான ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணமும் ஒன்றாக நேற்று (11.09.2018)  

செவ்வாய்க்கிழமை காலை பிரான்சு Phalsbourg நகரத்தின் மாநகரசபை முதல்வரை சந்தித்தபின்னர் நேற்று மதியம் பிரான்சு Strasbourg நகரில் உள்ள ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றிலை அடைந்து அங்கு கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்ந்து நீதிக்கான ஈருருளிப் பயண குழுவினருக்கும் ஐரோப்பிய ஆலோசனைச் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஐரோப்பிய ஆலோசனை சபை மண்டபத்தில் இடம்பெற்றதுடன், தமிழ்மக்களின் பிரச்சினை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தபின்னர், தொடர்ந்து ஐரோப்பிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றபோது, வழியில் குர்திஸ்டான் மக்களின் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் கலந்துகொண்ட மனிதநேய செயற்பாட்டாளர்களை குர்திஸ்டான் மக்கள் பிரதிநிதிகள் வரவேற்று குறித்த போராட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்ததுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்து வழியனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முன்னர் நீதிக்கான ஈருருளிப் பயண கவனயீர்ப்பு நிகழ்வு மாலை 18.00 மணிவரை இடம்பெற்றது. இதன்போது அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்த கவனயீர்ப்பு நிகழ்வை அவதானித்துச்சென்றதுடன், கவனயீர்ப்பு போராட்டத்தின் நோக்கம் அடங்கிய ஆங்கில, பிரெஞ்சு மொழியிலான துண்டுப்பிரசுரங்களையும் பெற்றுச் சென்றனர். தொடர்ந்து மாலை 18.00 மணியளவில் ஜெனிவா நோக்கி மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் புறப்பட்டுச்சென்றது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - ஊடகப்பிரிவு)

இணைப்பு: 
செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.