நீர்சத்து நிறைந்த கேரட் ஆரஞ்சு சாலட்!

Friday April 27, 2018

கோடை வெயிலில் இருந்து உடலை காத்துக்கொள்ள தினமும் பழங்கள், காய்கறி சாலட் சாப்பிடுவது மிகவும் நல்லது. இன்று கேரட் ஆரஞ்சு சாலட் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கேரட் - 2
ஆரஞ்சு - 2
எலுமிச்சம் ஜுஸ் - 11/2 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
கிஸ்மிஸ் - 15
முந்திரி - 15
ஏலக்காய்ப்பொடி - 1 சிட்டிகை
ஆலிவ் ஆயில் - 11/2 டீஸ்பூன்

செய்முறை :

கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். 

ஆரஞ்சு பழத்தின் தோலை உரித்து விதைகளை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கும் பொழுது ஆரஞ்சிலிருந்து ஜுஸ் வந்தால் அதை எடுத்து வைத்துக் கொள்ளவும். 

ஒரு மிக்ஸிங் பௌலில் எலுமிச்சம் ஜுஸ், தேன், ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்னர் இதில் துருவிய கேரட், ஆரஞ்சு பழத்துண்டுகள், எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு ஜுஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

கடைசியாக கிஸ்மிஸ், முந்திரி, ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

சூப்பரான கேரட் ஆரஞ்சு சாலட் ரெடி.