நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்!

நவம்பர் 30, 2017

கான்பூர்: உ.பி. மாநிலம் கான்பூரில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பத்திரிகை நிருபர் சுட்டுக்கொல்லப்பட்டார். உ.பி.யி்ல் இது இரண்டாவது சம்பவம் ஆகும்.

சுட்டுக்கொல்லப்பட்ட நிருபர் கான்பூரை சேர்ந்த நவீன் ஸ்ரீவஸ்தவா என்பதும் இவர் உள்ளூர் ஹிந்தி நாளிதழ் ஒன்றின் நிருபராக உள்ளார் என்பதும் போலீஸ்விசாரணையில் தெரியவந்தது. பில்ஹாவூர் பகுதியில் உள்ள பத்திரிகை அலுவலகத்தில் பணி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது அவரை பைக்கில் வந்த மர்ம நபர்கள் சுட்டுகொன்று கொலை செய்துவிட்டு தப்பியோடினர். கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

கடந்த மூன்று மாதங்களில் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல் அதிகரித்து வருகிறது. அக்டோபர் 21-ம் திகதி உ.பி. மாநிலம் காசிப்பூர் பகுதியில் ராஜேஷ் மிஸ்ரா என்ற நிருபர் பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

செப்டம்பர் 5-ம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கவுரி லங்கேஷ் என்ற பெண் நிருபர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். செப்டம்பர் 20-ம் திகதி திரிபுராவின் மேற்கு மாவட்டத்தில் மாண்டி பகுதியில் பழங்குடியினர் பகுதியில் ஏற்பட்ட கலவரம் குறித்த செய்தி சேகரிக்க சென்ற சாந்தனு பவுமிக் என்ற நிருபர் கொல்லப்பட்டார். 

நவ. 22-ம் திகதி திரிபுராவில் சைதன் பத்திரிகா என்ற பத்திரிகை நிருபர் சுதீப் தத்தா, திரிபுரா மக்கள் முன்னணி என்ற அமைப்பினர் நடத்திய போராட்டத்தினை செய்தி சேகரித்து கொண்டிருந்தபோது போலீஸ்காரருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் இன்று ( நவ.30) கான்பூரில் நவீன் ஸ்ரீவஸ்தவா என்ற பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

செய்திகள்
புதன் யூலை 18, 2018

காவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!