நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்!

Thursday January 11, 2018

உத்தரகாண்ட்உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவர் உச்சநீதிமன்ற  நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற மற்றும் நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டில் பணியாற்றும் நீதிபதிகள் நியமனத்தை தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உத்தரகாண்ட் உயர் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

விரைவில் இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி அலுவலகம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2007-ம் ஆண்டு முதல்உச்சநீதிமன்ற வழக்கறிஞராக இந்து மல்ஹோத்ரா செயல்பட்டு வருகிறார். அவர் நீதிபதியாக நியமிக்கப்படும் பட்சத்தில், வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் என்ற பெருமைக்கு உள்ளாவார் என்பது குறிப்பிடத்தக்கது.