நோக்கியா 7 பிளஸ் பெறும் புதிய அப்டேட்!

Monday May 07, 2018

ஹெச்எம்டி குளோபல் சமீபத்தில் அறிமுகம் செய்த நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் புதிய அப்டேட் இந்த வசதியை வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான நோக்கியா 7 பிளஸ் விரைவில் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த அப்டேட்டில் டூயல் வோல்ட்இ வசதி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை ஹெச்எம்டி குளோபல் நிறுவன மூத்த அதிகாரியான ஜூஹோ சர்விகாஸ் ட்விட்டர் மூலம் உறுதி  செய்திருக்கிறார். இரண்டாம் சிம் விரைவில் டூயல்-வோல்ட்இ வசதியை பெறும் (Second-SIM will get dual-VoLTE shortly) என தனது ட்விட்-இல் அவர் குறிப்பிட்டிருந்தார்.

புதிய அப்டேட் குறித்து சரியான தேதியை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நோக்கியா 7 பிளஸ் அதன் தலைசிறந்த வடிவமைப்பு மற்றும் கேமரா அம்சங்களுக்கு அதிகம் பாராட்டப்பட்டது. எனினும் இரண்டாவது சிம் ஸ்லாட்டில் வோல்ட்இ வசதி வழங்கப்படாதது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. 

நோக்கியா 7 பிளஸ் சிறப்பம்சங்கள்:

- 6.0 இன்ச் 2160x1080 ஃபுல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
- அட்ரினோ 512 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3800 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்