நோர்வேயில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கருத்தரங்கு

Sunday October 29, 2017

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சமகால அரசியல் கருத்தரங்கு ஒன்று இன்று (29) நோர்வேயில் இடம்பெற்றது. 

தமிழ் முரசம் வானொலியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கருத்தரங்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதன்போது, சிறிலங்காவில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சமகால அரசியல் நெருக்கடிகள், புதிய அரசமைப்பு என்பன தொடர்பாக நோர்வேயில் வாழும் தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. 

பெருமளவான மக்கள், குறிப்பாக இளைஞர், யுவதிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். அவர்களின் கேள்விகளுக்கும் மேற்படி இருவரும் பதிலளித்தனர்.