நோர்வேயில் நடைபெற்ற சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் கவனயீர்ப்பு

August 30, 2017

இன்னும் காணவில்லை

 

பள்ளிக்கு போன பிள்ளை

துள்ளி விளையாடி வந்த வழியில்

வெள்ளை வானில் கொள்ளை

அடிக்கப் பட்டதாய்

காற்று வந்து முனகி

அழுதது

 

இன்னும் அவனைக் காணவில்லை

கண் வலியில் தாய்மடி

வாடிக்கிடக்கிறது

 

தேடிய விழிகள்

அதிக வெப்பத்தால் 

வறண்ட தெருவைக் 

கண்ணீரால்

நனைக்கிறது 

 

திறந்த வீட்டுக்குள்

நான்கு கால் 

நாய்கள் புகுந்தால் போல் 

இரண்டு கால் 

பேய்களின் வலையில் 

சிக்குண்ட 

தங்கையின் தடயமே

இல்லாமல் போன போதும்

இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றது

பத்து திங்கள் சுமந்த 

வயிறு

 

பாழாய் போன வயிற்றின் பசி போக்க

படகேறி பத்து பாகம் கடக்க முன்னர் 

கடலிலே காணாமல் போன

அப்பாவின் அன்பிற்காய்

ஏங்கித்தவிக்கின்றது

ஏழை குழந்தையொன்று

 

வாழ வழியின்றி

வல்லூறுகளின் சுற்றிவளைப்பில்

நாள் தோறும்

தேள் கொட்டும் வேதனையில்

திளைக்காது

கட்டாருக்கு என்றாலும்

நாட்டைவிட்டு வெளியேற

பசவில்லா லொச்சில்

பதுங்கி நின்றபோது 

காவல் துறையின்

சோதனை நடவடிக்கையில்

காணாமல்போன அக்கா 

இன்னும் வீடு வந்து சேரவில்லை

 

ஒப்பாரி வைத்தபடியே

உறக்கம் தொலைத்து 

தவிக்கிறாள் அம்மா

 

இறுதியாக

கரங்களை உயர்த்தியபடி 

உங்கள் நரகத்திற்கு

வந்தோம்

விசாரணை என்ற பெயரில் 

குலைகுலையாய் கொண்டுபோனீர்

இன்னும் யாரும் திரும்பவில்லை 

அலையாத நாளும் இல்லை 

நிலையான தீர்வும் இல்லை 

கலையாத கனவோடு 

விடியாத இரவுகளில்

மட்டும் நாங்கள்

 

தூயவன்

செய்திகள்
சனி செப்டம்பர் 08, 2018

பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் இன்று Sampigny நகரைச் சென்றடைந்தது...

திங்கள் செப்டம்பர் 03, 2018

பேரணி அல்ல போர் அணியே தமிழீழ விடுதலையைப் பெற்றுத் தரும் - காசி ஆனந்தன்