நோர்வேயில் மாவீரர் நினைவாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா-2017- 2ம் நாள்

June 26, 2017

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் 19வது ஆண்டாக நடாத்தப்பட்ட மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா இரண்டாம் நாள் போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.

முதல் முறையாக 700இற்கு மேற்ப்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டு கடுமையான போட்டிகளை கொடுத்துள்ளார்கள்.

இம்முறை விளையாட்டுவிழாவின் பிரதம விருந்தினராக நோர்வேயின் தேசிய உதைபந்தாட்ட அணியில் விளையாடி வருகின்ற ஈழத்தமிழன் மதுசன் சந்திரகுமார் கலந்து கொண்டார். அத்தோடு சிறப்பு விருந்தினராக புளியங்குள முறியடிப்புச்சமரில் வீரச்சாவை தழுவிக்கொண்ட வீரவேங்கை அருள்மதியின் சகோதரி தர்சினி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இவ்விளையாட்டில் தமிழர்புனர்வாழ்வுக்கழகம் மகளீர் அமைப்பு மற்றும் விளையாட்டுக் கழகங்களின் பேருதவியும் நடுவர்களின் சிறப்பான பணியும் செயற்பாட்டாளர்களின் அயராத உழைப்பும் தமிழர்விளையாட்டு விழாவை சிறப்பாக நடாத்துவதற்கு பக்கபலமாக இருந்தது.

2017ம் ஆண்டிற்கான போட்டிகளில் மேற்பிரிவிலும் கீழ்பிரிவிலும் Stovner தமிழ் விளையாட்டுக்கழகத்தினர் முதலாவது இடத்தையும் North boys தமிழ் விளையாட்டுக் கழகத்தினர் இரண்டாம் இடத்தையும் கீழ்ப்பிரிவில் மூன்றாம் இடத்தை இளம்தளிர் விளையாட்டுக் கழகத்தினரும் மேற்ப்பிரிவில் 11Stars தமிழ் விளையாட்டுக் கழகத்தினரும் பெற்றுக்கொண்டனர்.

செய்திகள்
சனி March 24, 2018

இன்று நோர்வே அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை வளாகத்தின் அன்னைபூபதியின் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது

புதன் March 21, 2018

ஆனந்த சுதாகரினின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் சங்கீதா ஏறியமை தொடர்பில்

வியாழன் March 08, 2018

தமிழ் இனத்தின் நீதிக்காய் ஈருருளி பயணத்தை மேற்கொண்டுவரும் உறவுகளின் உள்ளத்துடிப்போடு தமிழ்முரசம் தன்னை இணைந்துக்கொண்ட உணர்வான தருணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்