நோர்வே பாராளுமன்றத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்

வெள்ளி நவம்பர் 06, 2015

நேற்று(5) நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நோர்வே மக்கள் அவையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.மாலை 6மணிக்கு ஆரம்பிக் கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது 7மணிவரை நடைபெற்றது .இத்தோடு நோர்வேயின் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு மகஜரும் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு 67 ஆண்டுகளாக இழைக்கப்பட்ட பேரவலங்களுக்கு அனைத்துலக நீதிமன்ற குற்றவியல் விசாரணையே நீதியை பெற்றுத்தரும்.

இந்த விசாரணையை உள்ளகப் பொறிமுறை மூலம் செய்ய முடியாது எனவும் தீர்க்கமாக ஐக்கிய நாடுகளின் அவையின் மனித உரிமைகளுக அறிக்கை பதிவு செய்துள்ளது. இது தான் இந்த அறிக்கையின் மூலம் பெறப்படும் பிரதான பலாபலன். ஆகவே தொடர்ந்து நீதிக்கான போராட்டத்தில் இவ்வறிக்கை ஒரு முக்கியமான வகிபாத்திரத்தை கொண்டிருக்கும் என நம்பலாம்.


தமிழ் மக்கள் இது தொடர்பில் விழிப்பாக இருப்பது முக்கியம். வெளி வந்துள்ள அறிக்கையை பயனற்றதாக்க எடுக்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டுமென்றால் நாம் தொடர்ந்து போராட வேண்டும்


இதன் அடிப்படையில் இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது எமது  கண்ணுக்கு முன்னால் சர்வதேசத்தின் துணையோடு நடாத்தி முடிக்கப்பட்ட தமிழ் இன அழிப்பிற்கு நியாயம் கிடைக்கும் வரை இனிவரும் காலங்களிலும் இப்படியான கவனயீர்ப்பு போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்படவுள்ளது எனவே எமது மக்கள் பங்கெடுத்து சர்வதேசவிசாரணையை நடாத்துவதற்கு அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும்.