பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் வைகோ!

சனி டிசம்பர் 15, 2018

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீா்ப்பாயம் அளித்துள்ள தீா்ப்பு ஆலை நிர்வாகமே எழுதி வெளியிட்டதுபோல் உள்ளது.

ஆலை இயங்குவதற்கு தமிழக அரசும், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமே முக்கிய காரணமாகும். இந்த ஆலை தூத்துக்குடி மக்களின் உயிர் குடிக்கும் எமன். தீா்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று வெல்வேன்.தூத்துக்குடியிலிருந்து ஸ்டெர்லைட் ஆலை அகற்றப்படுவதை வருகிற காலம் காணத்தான் போகிறது என வைகோ கூறியுள்ளார்.