படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கும் யோசனை!

January 12, 2017

படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்ற நல்லிணக்க பொறிமுறை குறித்த செயலணியின் பரிந்துரையின் ஊடாக படையினருக்கு பாரிய அவமரியாதை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் கடற்படை அதிகாரியான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

 உலகின் எந்தவொரு நாட்டிலும் படையினருக்கு புனர்வழ்வு அளிக்கப்பட்டதில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையின் ஊடாக படைவீரர்கள் பைத்தியக்காரர்கள் என்றே கருதுகின்றார்கள். இராணுவத்திற்கு எதிராக பயங்கரமான சில பரிந்துரைகள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள்