பட்டிப்பொங்கல் அன்று வடக்கில் இறைச்சி கடைகள் பூட்டு!

January 11, 2017

வடக்கு மாகாணத்தில் உள்ள இறைச்சி கடைகள் அனைத்தையும் பட்டிப்பொங்கல் அன்று மூடுமாறு உத்தரவிடப்பட்டு, வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. வடக்கு மாகாண சபையின் இந்த வருடத்திற்கான முதலாவது அமர்வு நேற்றைய தினம் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன் போதே மேற்படி பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாக விளங்கும் தைப்பொங்கல் தினத்துக்கு மறுநாள் உழவுக்கு கைகொடுத்த இடபங்கள் மற்றும் பசுக்களுக்கு விழா எடுக்கும் படிப்பொங்கல் விழா தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. பூரண நிறையுனவான தூய பசும்பாலையும், இரசாயன தீங்கில்லாத இயற்கை பசளையும், உழவு தொழிலுக்கு, உதவிகளையும் நல்கும் இக்கால்நடை செல்வங்களுக்கு விழா எடுக்கும் அதேவேளை அவற்றை இறைச்சிக்காக கொல்வது முரணான செயற்பாடாக உள்ளது.

இதனை கருத்திற்கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து இறைச்சிக்கடைகளும் ஆண்டு தோறும் பட்டிப்பொங்கல் தினத்தன்று மூடியிருத்தல் வேண்டும் என இச்சபை கோருகின்றது. என்ற தீர்மானத்தை வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முன்மொழிந்தார். இந்த பிரேரணை அனைவரது ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 

செய்திகள்
சனி May 19, 2018

புளியங்குளத்துக்கும், ஓமந்தைக்கும் இடையே இன்று பிற்பகல் நடந்த பேருந்து விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.