பண்டிகை கால போக்குவரத்து சேவைகள் இன்றும் உள்ளது!

Monday April 16, 2018

பண்டிகைக் காலத்தையொட்டி இலங்கை போக்குவரத்து சபை மேலதிக பேருந்துகள்  சேவையில் ஈடுபடுத்தியுள்ளதுடன் விசேட ரயில் சேவைகளும் இடம்பெறவுள்ளன.

பண்டிகை காலத்தை முன்னிட்டு பெரும்பாலானோர் கொழும்பில் இருந்து தூர இடங்களுக்கு செல்வதற்கும் பின்னர் மீண்டும் கொழும்பு திரும்புவதற்கும் இந்த மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் இந்த பேருந்துகள் சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்தின் சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.