பன்னாட்டு விசாரணையின்மூலமே எமக்குத் தீர்வு கிடைக்கும்!

செப்டம்பர் 21, 2017

பன்னாட்டு விசாரணையின் மூலமே தமக்கு விடிவு கிடைக்குமென காணாமலாக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்தில் கொட்டகையமைத்து 210 நாட்களிற்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் ஜேர்மனி நாட்டுச் சட்டத்தரணியிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவித்ததாவது,

யுத்தம் நிறைவடைந்த போது எங்கள் உறவுகள் காணாமல் போகச் செய்யப்பட்டனர். இவர்களில் பலர் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலேயே காணாமல் போகச் செய்யப்பட்டனர்.

எனவே, காணாமலாக்கப்பட்ட எங்களின் உறவுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும். அது பன்னாட்டு விசாரணையின்மூலமே அது சாத்தியமாகும் எனத் தெரிவித்தனர்.

செய்திகள்
ஞாயிறு June 24, 2018

இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது.

ஞாயிறு June 24, 2018

தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் துரைரட்ணசிங்கம்