பன்னாட்டு விசாரணையை வலியுறுத்திய ஈருறுளிப் பரப்புரைப் பயணம் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தை வந்தடைந்துள்ளது!

வியாழன் செப்டம்பர் 03, 2015

தமிழின அழிப்பிற்கு நீதிவழங்கும் வகையில் பன்னாட்டு நடுவர் மன்றம் நிறுவப்படுவதை வலியுறுத்தித் திங்கட்கிழமை மதியம் இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாகத் தொடங்கப்பட்ட ஈருறுளிப் பரப்புரைப் பயணம் இன்று நெதர்லாந்து டென்ஹாக் நகரில் உள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தை வந்தடைந்துள்ளது.

 

 

 

அங்கிருந்து இன்னும் பல்வேறு கட்டங்களாக ஜெனீவா நோக்கி மிதிவண்டிப் பரப்புரை அஞ்சலோட்டப் பயணம் பெல்ஜியம்  உள்ளடங்கலான ஐரோப்பிய நாடுகளில் உள்ள அறப்போர் செயற்பாட்டாளர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட இருக்கின்றது.

எதிர்வரும் 04-09-2015 அன்று பி.ப 14:00 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழு - பெல்ஜியம் கிளையினர் ஒரு கவனயீர்பு போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளனர். இவ் போராட்டதில் அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டு எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெற இணைந்து கொள்வோம்.