பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் நீக்குங்கள்

Wednesday September 12, 2018

சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அரசாங்கத்தைக் கோரியுள்ளது. 

ஜெனீவாவில் இன்று இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. 

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டமூலம் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைவதானதாக இருக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளின் செயற்குழு இன்று ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படுகொலை செய்யப்படவும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படவும் அவர்கள் துன்புறுத்தப்படவும் பயங்கரவாதத் தடைச் சட்டமே காரணமாக இருந்தது. 

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் அச்சட்டம் விலக்கிக்கொள்ளப்படாமையால் இளைஞர், யுவதிகள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர். இது தொடர்பாக தமிழ் மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் கடும் அழுத்தம் கொடுத்துவந்தனர். 

மேற்படி சட்டத்திற்கு பதிலீடாக சிறிலங்கா அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவர முயற்சி எடுத்துள்ளது. எனினும், அச்சட்டமும் முன்னைய சட்டமூலத்திற்கு ஒப்பானதாக மாற்றப்பட்டுள்ளது. 

இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியிலேயே ஐ.நா சபை மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.