பரிஸ் சோம்ஸ் எலிசேயில் தாக்குதல் - காவற்துறையினர் பலி - தயேஸ் பொறுப்பேற்றது!

April 21, 2017

நேற்றிரவு (20) இரவு 21h00 மணியளவில் பிரான்சில், பரிஸ் சோமப்ஸ் எலிசேயில் 102  avenue des Champs-Elysées அருகில் காவற்துறையினரின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

கனரகப் போர் ஆயுதத்தினால் காவற்துறையினரை நோக்கி ஒரு நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்காண்டதில் ஒரு காவற்துறை வீரன் காயமடைய மற்றும் ஒரு வீரன் கொல்லப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்ட பயங்காரவாதி சக வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்னமும் தாக்குதலிற்கான கரணம் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்திருக்கும் பரிசின் காவற்துறை நிர்வாகத் தலைமையகம், தாக்குதலாளி உபயோகப்படுத்தியது கனரகத் தானியங்கித் துப்பாக்கி எனவும் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உலங்கு வானூர்திக் கண்காணிப்புகள் அவெனயூ சோம்ப்ஸ் எலிசேவின் மேல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிகவும் குறுகிய நேரத்தில் மிகவும் பலமான துப்பாக்கிச் சூடுகள் தொடர்ச்சியாக நடந்ததாக தாக்குதல் வீதியின் சமாந்திரமான வீதியில் அமைந்துள்ள உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளனர்.

இன்று நடந்த பயங்கரவாதத் தாக்குததலின் விசாரணைகளைப் பரிசின் பயங்கரவாதத் தடைப்பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த விசரணையில் உள்ளகப் புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் பிரிவான DGSI (Direction générale de la sécurité intérieure) மற்றும் பயங்கரவாதத் தடைப்பிரிவான SAT (Section antiterroriste), குற்றத்தடுப்புப் படையணி (Bac), ஆகியவை களமிறக்கப்பட்டுள்ளதாகப் பிரதமார் பேர்னார் காசநெவ் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நடைபெற்ற சோம்ஸ் எலிசே பயங்கரவாதத் தாககுதலிற்கு, இஸ்லாமிய தேசப் பங்கரவாதிகளான தயேஸ் (ISIS) பொறுப்பேற்றுள்ளது.

இந்தத் தாக்குதல் தங்களால் மேற்கொள்ளப்பட்டது என்றும், இந்தத் தாக்குதலை மேற்கொண்டவர்,  Abu Yousef al-Belgiki எனவும் தயேஸின் பிரச்சாரத்தளமான Amaq வெளியிட்டுள்ளது.

இந்தப் பயங்கரவாதி பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் எனவும் தற்போது இந்தத் தளம் உறுதிப்படுத்தி உள்ளது.

செய்திகள்